aat மாணவி க.பொ.த. உயர்தர வர்த்தக பிரிவு-2018 பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாமிடம்

மட்டக்களப்பு HBS கல்லூரியில் இலங்கை AAT தொழில்சார் கணக்கியல் கல்வியினை பாடசாலையில் உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும் போதே முழுமையாக பூர்த்தி செய்திருந்த மட்டக்களப்பு  வின்சன்ட் மகளீர் கல்லூரி மாணவி செல்வி. நவநீதன் கிருஷிகா 2018 உயர்தர வர்த்தக பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் நிலையினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாணவி N. கிருஷிகா G.C.E. (O/L)  பரீட்சையின் பின்னர் இலங்கை aat கல்வி நிறுவனத்தில் தம்மை மாணவியாக பதிவு செய்து கொண்டு aat  கல்வியின் மூன்று மட்டங்களையும் பாடசாலையில் உயர்தரம் கற்றுக்கொண்டிருக்கும் போதே பயின்று எல்லா பரீட்சைகளிலும் திறமையான பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்தார்.

மாணவி கருத்து தெரிவிக்கையில் பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போதே aat கல்வியினை இணைந்து கற்பது உயர்தர பாடங்களை போதிய அர்த்தங்களுடன் விளங்கிக்கொள்ள கூடியதாக இருந்ததுடன் இது எனக்கு உயர்ந்த Z-score  இனை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெறுவதற்கும் aat கல்வி பெரிய அளவில்  உதவியிருந்தது  எனக்கூறினார்.

HBS  கல்லூரியின் தலைமை அதிகாரி N. சுரேஷ்குமார் கருத்துத் தெரிவிக்கையில்  2018 உயர்தர பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் aat கல்வியினை கற்ற பல மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

இலங்கையில் பிரதானமாக சிங்கள மாணவர்களே உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்கும் போது aat கணக்கியல் கல்வியையும் அதனுடன் இணைத்துக் கற்பது வழக்கமாக இருந்தாலும்

தற்போது எமது மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களும் அதனைப் பின்பற்றி aat  கணக்கியல் கல்வியினை கற்பதன் மூலம் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகுவது மகிழ்ச்சியை தருகின்றது எனக் கூறினார்.

 AAT கல்வியினை முழுமையாக பூர்த்தி செய்த மாணவி செல்வி. ந. கிருஷிகா அதனூடாக இங்கிலாந்து CIMA  கற்கை நெறியில் பல பாடங்களில் விலக்களிப்பினை பெற்று தற்போது கொழும்பு WISDOM  கல்லூரியில் CIMA  கல்வியினை தொடர்ந்து வருகிறார்.

இவர் எதிர்காலத்தில் சிறந்ததொரு வணிகத்தலைவராக வர வேண்டும் என HBS  தலைமை அதிகாரி  N. சுரேஸ்குமார் தனது வாழ்த்துக்களை
தெரிவித்தார்.