புளியந்தீவு ரிதத்தின் பொங்கல் விழா ; மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளும் வழங்கிவைப்பு.




உழவர் திருநாளாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் முகமாக தமிழர் பிரதேசமெங்கும் பொங்கல் விழாக்கள் சிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்றைய தினம் கழகத்தின் முன்னாள் தலைவர் ச.சனத்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை புளியந்தீவு தெற்கு வட்டார உறுப்பினர் அ.கிருரஜன், மண்முனை வடக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர், மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர், எழுகதிர் அமைப்பின் உறுப்பினர் லக்ஸ்மன், புளியந்தீவு தெற்கு சனசமூக நிலைய நிருவாகத்தினர் உட்பட கழக அங்கத்தவர்கள், ஆலோசகர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பொங்கள் பூசை, மற்றும் கலாசார விளையாட்டுக்கள், இளைஞர் யுவதிகளின் நடனங்கள் என்பன இடம்பெற்றதுடன் விசேட நிகழ்வாக மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் எழுகதிர் அமைப்பின் உறுப்பினர் லக்ஸ்மன் அவர்களினால் கழகத்திடம் கையளிக்கப்பட்ட அப்பியாசப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.