வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவசாய ஆராச்சி மாநாடு


-செங்கலடி நிருபர்-
பேண்தகு விவசாயத்தில் புதுமையும் கண்டுபிடிப்பும்; எனும் கருப்பொருளில் இரண்டாவது விவசாய ஆராச்சி மாநாடு கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் புதன்கிழமை (09) நடைபெற்றது.

பொங்கலூர் இந்தியன் தோட்டக்கலை ஆராட்சி மையத்தின் பிரதான விஞ்ஞானி காலநிதி ஈ.சிறினிவாய் ராவ்  சிறப்புரையாற்றினார்.

ஆராச்சி மாநாட்டில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கைகளில் 28 வெவ்வேறுபட்ட விவசாயம் சார்ந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டன.

கிழக்குப் பலைக்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி த.ஜெயசிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆராட்சி மாநாட்டில் பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி ஈ.கருணாகரன், விவசாய பீடாதிபதி பி.சிவராஜா, கலை கலாசார பீடாதிபதி மு.ரவி, விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி எம்.வினோபாவா, வர்தக துறை பீடாதிபதி திருமதி வி.ராகல், கிழக்குப் பல்கலைக் கழக பதிவாளர் ஏ.பகிரதன் ஆய்வாளர்கள் மாணவர்கள் என பலர்; கலந்து கொண்டனர்.