கோட்டைமுனை ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்திற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு


(சிவம்)

மட்டக்களப்பு கோட்டைமுனை ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் நாளை சனிக்கிழமை (12) ஆரம்பமாவதை முன்னிட்டு கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை (11) நடைபெற்றது.

தாமரைக்கேணி மகா மாரியம்மன் ஆலயத்தில் அதன் பிரதம குரு சிவஸ்ரீ சக்திதாசனினால் ஆலயத்தில் அம்பாளுக்கு பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கொடிச்சீலை ஊர்வலமாக பிரதான வீதி வழியே எடுத்துவரப்பட்டது.

சனிக்கிழமை (12) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள வருடாந்த உற்சவம் தொடர்ந்து எட்டு நாட்கள் காலை 8.00 மணிக்கு உற்சவம் ஆரம்பமாகி மாலை யாகபூஜை இடம்பெற்று இரவு வசந்த மண்டப அலங்கார பூஜையைத் தொடர்ந்து சுவாமி உள்விதி வலம் வரும்.

தைப்பூச தினத்தன்று திங்கட்கிழமை (21) காலை 6.00 மணிக்கு கல்லடி கடற்கரையில் தீர்த்தோற்சவம் நடைபெறுவுள்ளதோடு வருடாந்த திருவிழா நிறைவுபெறும். வியாழக்கிழமை (24) மாலை 6.00 மணிக்கு வைரவர் பூஜை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வருடாந்த மஹோற்சவக் கிரியைகள் யாவும் மஹோற்சவ பிரதம குரு பிரம்மஸ்ரீ இலட்சுமிகாந்த ஜெகதீஸ்வர குருக்கள் தலைமையில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ எஸ். ராமதாஸ் குருக்கள் மற்றும் உதவிக்குரு சிவஸ்ரீ கு.தயா குரு உள்ளிட்ட உதவிக் குருமார்கள் நடாத்துவர்.

ஞாயிற்றுக்கிழமை (20) மாலை 4.00 மணிக்கு சுவாமி நகர வீதிகளின் வளியே நகர் வலம் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.