வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு


(ஷமி மண்டூர்,நவா)

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு  வெல்லாவெளி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வினை போரதீவுப்பற்று கிராம மக்கள் மற்றும்இ காவேரி மகளீர் அமைப்பு மண்டூர் ஆகிய அமைப்புக்கள  ஏற்பாடு செய்திருந்தனர். ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. இந்நிகழ்வினை கௌரவிற்கும் முகமாக விவசாய நீர்பாசன கிராமிய பொருளாதார இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி மற்றும் முன்னாள் பிரதியமைச்சரும் பட்டிருப்பு தொகுதியின் பிரதம அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி அமைச்சின் பிரத்தியோக செயலாளர்கள் பிரதேச சபையின் பிரதேச உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிஇதையல் இயந்திரங்கள்இகூரைத்தகடுகள்இசமையல் பாத்திரங்கள் பொருட்கள் வழங்கப்பட்டன. அத்தோடு பிரதம அதிதிகளின் உரைகள் நிகழ்த்தப்பட்டது.