மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் சுயதொழில் முயற்சியாலர்களுக்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு




மண்முனைப்பற்று பிரதேச செயலக ஆரையம்பதி விதாதா வள நிலையத்தினால் தெரிவு செய்யபட்ட ஒரு தொகுதி பயனாளிகளிற்கு சுயதொழிலை விருத்தி செய்வதற்கான உபகரணங்கள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.

ஆரையம்பதி விதாதா வள நிலையமூடாக இடம்பெற்ற விஞ்ஞான தொழிநுட்ப பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களினூடாக சுயதொழில் பயிற்சிகளை திறன்பட பெற்று ஆர்வமோடு சுயதொழிலை ஆரம்பிக்க உறுதிபூண்ட ஒருதொகுதி சுயதொழிற் பயிற்சியாளர்கள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கான சுயதொழில் உபகரணங்கள் மண்முனைப்பற்று பிரதேச செயலக ஆரையம்பதி விதாதா வள நிலையமூடாக வழங்கிவைக்கப்பட்டன.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் திருமதி சுனிதா அகிலன் மற்றும் களக்கூட்டிணைப்பாளர் சண்முகநாதன் ரகுதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளிற்கான சுயதொழில் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.

எதிர்காலத்தில் மண்முனைபற்று பிரதேசத்தில் சுயதொழில் முயற்சிகளினூடாக வாழ்வாதாரத்தை விருத்தி செய்கின்ற நோக்கோடு பன்னீர் உற்பத்திக்கான உபகரணங்கள் தையல் தொழிமுயற்சிசார்ந்த உபகரணங்கள் மெழுகுவர்த்தி உற்பத்தி சார்ந்த உபகரணங்களென ஒரு தொகுதி பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.