மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை உள்ளீர்க்கும் கால்கோள் நிகழ்வுகள்





(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியின் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை உள்ளீர்க்கும் "கால்கோள் நிகழ்வுகள்" வியாழக்கிழமை(17) காலை 9.30 மணியளவில் காட்மண்ட் மண்டபத்தில் நடைபெற்றன.

கல்லூரியின் முதல்வர் இராசதுரை-பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் வி.மயில்வாகனம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக வலய கல்வி அலுவலக திட்டமிடல் பிரிவுக்கான உதவி பணிப்பாளர் வை.சி.சஜீவன்,வலயக்கல்வி அலுவலகத்தின் ஆரம்பபிரிவு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி எஸ்.பூபாலசிங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் பாலர் பாடசாலையின் மட்டக்களப்பு மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளருமான எஸ்.சசிகரன்,பழைய மாணவர்சங்கத் தலைவர் வீ.தர்சன்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் எந்திரி வை.கோபிநாத்,பிரதியதிபர்களான எஸ்.சதீஸ்வரன்,இ.இலங்கேஸ்வரன்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள், கலந்துகொண்டார்கள்.

2019ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுடன் கால்கோள் விழா ஆரம்பமானதுடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.