வாகநோி நீா்பாசன திட்டம் பிாிப்பு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு





மட்டக்களப்பு வாகனேரி நீர்பாசன திட்டத்தினை உறுகாம நீர்பாசன திட்டத்திலிருந்து பிரிப்பது தொடர்பாக இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமிர்அலி எடுத்த முயற்ச்சியினை தொடர்ந்து பிரதேசத்தின் விவசாயிகளினால் கடந்த திங்கள் (7.1.2019) அன்று இத்திட்டத்திற்க்கு எதிராக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அமைய விவசாய அமைப்புக்களுக்கு குறித்த திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல் நிகழ்வு வாழைச்சேனை கமநல கேந்திர நிலைய மகாநாட்டு மண்டபத்தில் நேற்று திங்கள் கிழமை மாலை நடைபெற்றது.

விவசாய நீர்பாசன கிராமிய பொருளாதார இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமிர்அலியின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன்,முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்.மாவட்ட நீர்பாசன பொறியியலாளர் எம்.அசார் மற்றும் ஏனைய தினைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

மாவட்ட நீர்பாசன பொறியிலாளரால் புதிதாக உருவாக்கப்படவுள்ள வாகனேரி நீர்பாசன திட்டத்தினால் விவசாயிகள் பயன்பெறும் நன்மைகள் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடாந்து இராஜங்க அமைச்சரினால் மேலும் பல விடயங்கள் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தினால் 18 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் செய்கை பண்ணப்படவுள்ளதுடன் பல மில்லியன் ரூபாய்களில் நீர்பாசனத்திற்கு தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றும்,ஒரு பொறியியலாளர் உட்பட 4தொழில் நுட்ப உத்தியோகஸ்த்தர்களுடன் எல்லாமாக 28 பேர்கள் நேரடி வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வர். விவசாயிகளின் உற்பத்தி பெருக்கப்பட்டு வாழ்வில் சுபீட்சம் அடைவர் என்று விளக்கமளித்தார்.

அம்பாறை,பொலநறுவை,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் 2 ற்கும் மேற்பட்ட நீர்பாசன திட்ட அலகுகள் காணப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2அலகுகளே மாத்திரமே உள்ளதாகவும் இதனால் விவசாயிகளுக்கு குறைந்தளவு நன்மைகளே கிடைக்கப் பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

முன்னைய காலப்பகுதியில்; இருந்த அதிகாரிகள் ஏன் இவ்வாறனதொரு திட்டத்தினை கொண்டுவர முயற்ச்சிக்கவில்லை என கவலை வெளியிட்டார்.

வாகனேரி நீர்பாசன திட்டத்தினை தனியாக பிரிப்பதற்கு ஏற்றுக் கொள்ளமாட்டோம்,விவசாயிகள் தொடப்பான திட்டங்களை அமுலுக்கு கொண்டு வரும் போது விவசாய அமைப்புக்களுடன் கலந்துரையாடப்படல் வேண்டும் .அத்துடன் மாவட்ட அபிவிருத்தி குழுவில் திட்டம் ஆராயப்பட்டே உரிய இலாக்காக்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்துவது வழமை, வாகனேரி திட்டமானது உறுகாமம் திட்டத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டுமானால் பெருமளவு நிலப்பிரப்பினை கொண்ட கிரான் தெற்கு பிரதேச திட்டத்தின் கீழ் அமைய வேண்டும் என சில விவசாயிகள் கோரிக்கை விடுத்;தனர்.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் இராஜங்க அமைச்சர் இவ் மாவட்டத்தின் நலன் கருதி புதிய திட்டங்களை முன்மொழியலாம். இதன் நன்மை தீமைகளை அரசாங்க அதிபர் தலைமையில் நீர்பாசன மாவட்ட பொறியியலாளர் திணைக்களத்துடன் இணைந்து விவசாய அமைப்புக்களை அழைத்து விளக்கமளித்து அதன் பின்னர் இத்திட்டம் தொடர்பாக அமுல்படுத்துவதற்க்கும் அமையப் பெறவுள்ள இடம் தொடர்பாகவும் தீர்மானம் எடுக்குமாறு அரசாங்க அதிபரினையும் நீர்பாசன பொறியியலாளரையும் பணித்தார்.