பெரியகல்லாற்றில் மெதடிஸ்த மிசன் தமிழ் பெண்கள் பாடசாலையின் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு




ரவிப்ரியா

பெரியகல்லாறு மெதடிஸ்த மிசன் தமிழ் பெண்கள் பாடசாலையின் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வியாழன்று (17) அதிபர் மூ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்றபோதுமாணவர்கள் மற்றும் அதிதிகள் வரவேற்கப்படுவதையும், பிரதம அதிதியும் பிரதி கல்விப்பணிப்பாளருமான திருமதி ஜ.பிரியதர்சன் மாணவர்களுக்கு அன்பளிப்பு வழங்கிவைப்பதையும்படங்களில் காணலாம்.


இந் நிகழ்வில் விசேட அதிதிகளாக பட்டிருப்பு வலய பாடசாலை இணைப்பாளர் எஸ்.ஜெயமோகன்,மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் பீ.கமல்ராஜ் ஆகியோரும், கௌரவ அதிதிகளாகசர்வார்த்த ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வண்ணக்கர் மூ.மன்மதராஜா, ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயதலைவர் ம.கிருபைராஜா, மெதடிஸ்த தேவாலய போதகா அருட்திரு ஜே.ஜே.ஞானரூபன், கிறிஸதவசபை போதகா ஜோண் பாலா ஆகியோரம் கலந்து கொண்டு சிறப்பித்தனா.

தரம் 1க்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட 62 மாணவர்களும் பாடசாலைக்கு முன் உள்ள பிரதான வீதியில்வைத்து தரம் 2 மாணவர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு கைகோர்த்து, பாடசாலைக்குள் அழைத்துவரப்பட்டனர். பாடசாலை சிறந்த முறையில் பதிய மாணவர்களை கவரும் வண்ணம்.அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து இடவசதி குறைந்த இடத்தில் சம்பிரதாயபூர்வமாக மங்கலவிளக்கேற்றிநிகழ்வுகள் இடம்பெற்றன. மாணவி ஒருவரின் ஆங்கில மொழி மூலமான வரவேற்புரை வயதை மீறியபக்குவத்தடன் தளம்பலேதமின்றி கச்சிதமாக அமைந்திருந்தது. அனைவரையும் கவரவே செய்தது.நடன நிகழ்வுகளும் அவ்வாறே.

ஆலய வண்ணக்கர் மூ.மன்மதராஜா தனதுரையில் இப்பாடசாலையின் அதிபர் தனது மாணவன்என்பதில் தான் பெருமையடைவதாகவும், கல்லாறு கல்வியாறாகப் பெயரெடுப்பதற்கு மிசனரிமார்மூலம் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையும் இதற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ஆண்கள் பாடசாலையும்அளப்பரிய பங்களிப்புச் செய்துள்ளன என்பதை நன்றியுணர்வோடு தெரிவித்தார்.

அதிதிகள் தங்கள் உரையில் பாடசாலை அதிபரின் ஆளுமையையும் செயற்திறனையும் வெகுவாகப் பாராட்டினார் .பாடசாலை இணைப்பாளரும் சேவைக்கால ஆலோசகருமான எஸ்.ஜெயமோகன் இதுபோன்ற மாணவர்களின் வரவேற்பை எங்கும் கண்டதில்லை எனக் குறிப்பிட்டதுடன்,இப்பாடசாலையில் சேர்வதற்காக அதிகளவு விண்ணப்பங்கள் கிடைத்தது (ஏனைய பாடசாலைகளில்போதிய மாணவர்கள் இல்லாத நிலையில்) இப்பாடசாலையின் தரத்தை உணர்த்துவதாகவும்தெரிவித்தார்

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பட்டிருப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜ.பிரியதர்சன் பாடசாலையை வெகுவாகப் பாராட்டியதுடன், பாடசாலைக்கான தேவைகளை செய்துகொடுக்க தயாராக இருப்பதாகவும் தேவையான காணியை பெற்றோரும் சமூக அமைப்புக்களும்சேர்ந்து பெற்றுக் கொண்டால் கட்டட வேலைகளை திணைக்களம் மேற்கொள்ளும் என்றும்குறிப்பிட்டார்.