இன்றைய வானிலை!




தற்போது காணப்படும் வறட்சியான வானிலையில் சிறிது மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஊவா மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 
காலி மற்றும் மாத்தறை மத்திய, சப்ரகமுவ மற்றும் மேற்கு மற்றும் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 
சபரகமுவ பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.