சிறுநீரகம், உடல் உறுப்புக்களை வேறொருவருக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம்




திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

சுகாதாரம், போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் இலங்கை விமானப் படைக்குமிடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் சுகாதாரம், போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.