கல்குடா வலயத்திலுள்ள மீள் குடியேற்ற பிரதேசங்களின் தற்போதய கல்விநிலை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கல்வி வலயமாக கல்குடா வலயம் திகழ்கின்றது. கல்குடா வலயத்தின் எதிர்காலத்தின் கேள்விக்குறிப்பற்றி சிந்திக்கும் போது மிகவும் கவலைக்கிடமான விடயமாக ஒரு வலயத்தின் கல்வி வளர்ச்சியினது அவ் வலயத்திலுள்ள முழுப்பாடசாலைகளின் வளர்ச்சியிலும் தங்கியுள்ளது.
தேசியபாடசாலைகளாக இருந்தாலும் சரி மகாவித்தியாலயங்களாக இருந்தாலும் எப்பாடசாலையின் பெறுபேறும் வளர்ச்சியும் ஒரு வலயத்தின் வளர்ச்சியினை உயர்த்தவும் கூடும் தாழ்த்தவும் கூடும்; என்பதில் ஐயமில்லை.

எம்மில் எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை கல்குடா வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில் இன்னும் பல குறைபாடுகளுடன் அபிவிருத்தி அடைந்த பாடசாலைகளாகவே இருக்கின்றன. குறிப்பாக நான் கூறவரும்விடயம் கோறளைப்பற்று தெற்கு பிரதேசத்திற்குற்பட்ட கிரான் பிரதேசசெயலகத்திற்குட்பட்டு காணப்படும் மீள்குடியேற்ற பகுதிகளான புலாக்காடு, குடும்பிமலை, தரவை, மியான்கல், பொண்டுகள்சேனை, வட்டிபோட்டமடு என வாழும் மாணவர்களின் எதிர்காலத்தினை நோக்கிய கேள்விக்குறிக்கு யார் பொறுப்பாளிகள் என்பது தெரியவில்லை.

இன்றைய சிறுவர்களே நாளையதலைவர்கள் என்று கூறும் சமூகம் இப்பிரதேச மக்களின் கல்விவளர்ச்சியில் அக்கறை காட்டாமல் தவறுவது ஏன் என்று தெரியவில்லை இம்மக்களின் வாழ்வாதாரமும் வாழ்க்கையும் காட்டு விலங்குகளின் சேதத்திற்கும் வெள்ளம் வரட்சி போன்ற இயற்கை யுத்த பேரழிவுக்கும் உட்பட்டு அன்றாடம் அல்லப்படும் இவர்கள் தங்களது குழந்தைகளும் அவ்வாறான நிலைகளுக்கு தள்ளப்படகூடாது என்று கல்வியே தமது குறிக்கோள் வாழ்வின் விடிவெள்ளியாக கருதுகின்றனர்.

சுமார் 15 கிராமங்கள் காணப்படும் இப்பிரதேசத்தில் தரம் 5வரை கற்கும் பாடசாலைகளே காணப்படுகின்றன. பாடசாலை செல்ல முன்பு ஒரு சில மாணவர்கள் ஆரம்ப பாடசாலை செல்கின்றனர். இது குறிப்பிட்ட ஒரு சில கிராமங்களில் மட்டுமே உள்ளது. மாணவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக கூறுகின்றனர். இவர்களது எதிர்காலம் குறித்து சிந்திப்பதற்கு அதிகாரிகளோ அரசியல் வாதிகளுக்கோ நேரமில்லை என்றே கூறலாம்.

இப்பாடசாலைகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகும். ஒரு பாடசாலைகளில் குறைந்தளவு 20 மாணவர்களே கல்விகற்கின்றனர். மாணவர்களது இடைவிலகள் அதிகமாக உள்ளது மாணவர்களிடையே இளவயது திருமணம், வேலைக்கு செல்லல் போன்ற பிரச்சினைகள' காணப்படுகின்றன. கல்வி கற்க விரும்பும் மணவர்களும் தரம் 5 மட்டுமே கல்வி கற்கும் வசதி உள்ளதால் மேற்கொண்டு கல்வியினை தொடரமுடியாதுள்ளதாக கூறுகின்றனர். மேலும் பாடசாலைகளில் கல்விகற்பதற்கு வசதிகள் குறைவான நிலையும் ஆசிரியர் பற்றாக்குறையும் அதிகளவில் காணப்படுகின்றதாக கூறுகின்றனர். பாடசாலையில் கற்பிப்பதற்கு கஸ்ரப்பிரதேசம் என்பதால் பல ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று செல்கின்றனர். கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மனநிறைவுடன் கற்பிக்க வருவதில்லை என்ற பல குற்றச்சாட்டுகள் இச் சமூகத்தில் காணப்படுகின்றது.

இப்பிரதேசத்தினை முன்னேற்றுவது எம் அனைவரது அடையாளமாகும் என்றாலும் கல்குடா வலயத்திற்கே அதிக பொறுப்புள்ளது எனலாம். மாணவர்களது கல்வி வளரச்சியில் தான் ஒரு நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது. கல்குடா வலயம் பின்நோக்கி தள்ளப்பட்டமைக்கும் இதுவும் காரணமாக அமையும். கல்குடா வலயம் 31ஆவது கல்வி வலயமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும். அபிவிருத்தி அடைந்த பாடசாலைகளில் மேலும் மேலும் அபிவிருத்தி செய்வதில் பிரயோசனமில்லை. ஆசிரியர்வளம் பாடசாலைகளுக்கு ஆசிரியர் வளத்தினை வளங்குவதை விட ஆசிரியர் வளம் குறைவான பாடசாலைகளுக்கு ஆசிரியர்களைவ ளங்குவது அவசியமாகும்.

அதுமாத்திரமின்றி இன்று அரசியல்வாதிகளின் தலையீட்டால் இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்கள் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். நீங்கள் ஆசிரியர் தொழில் நியமனம் பெறும் போது எப்பிரதேசமாயினும் கடமையாற்றுவம் எனும் உறுதிமொழி எடுத்த பின்னே தொழிலில் ஈடுபட்டு இருப்பீர்கள். ஆனால் சில பேர் அதனை வேலை கிடைத்தவுடன் மறந்துவிட்டு செல்வாக்கினால் சொகுசான பாடசாலைகளில் கற்பிக்க சென்றுவிடுகின்றனர். இது முழுவதும் ஆசிரியர்வாண்மைக்கு அர்த்தமற்ற செயலாகும். ஆசிரியர் தொழிலே ஒரு நாட்டினது எதிர்காலத்தினை நிர்னயிக்கின்றது. ஒரு ஆசிரியராலே வைத்தியர், பொறியிலாளர் என பலரும் உருவாக்கப்படுகின்றனர். ஆசிரியர் தொழில் என்பது பலருக்கும் கிடைக்காது . கடவுள் கொடுத்த வடமாகும். ஒருவனை சமூகத்தில் சிறந்தவனாக கல்விமானாக வடிவமைக்கும் சிற்பிகளாக திகழும் நீங்கள் சிறிதளவு அற்பனிப்புடன் செயல்படல் வேண்டும்.

அண்மையில் புலமைப்பரிசில் பரீட்சையில் புலாக்காடு பாடசாலையினை சேர்ந்த மாணவி 182 புள்ளிகளை பெற்றிருந்தார். இதுவும் அற்பணிப்புடன் செயற்பட்ட ஆசியர்களுக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். சுயநலம் மிக்க மனிதர்களிடையே பொதுநலம் கொண்டு தனது தொழிலின் மகத்துவத்தினை உணர்த்திய ஆசிரியரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகின்றேன்.

அதுமாத்திரமின்றி திறமைமிக்க ஆசிரியர்களை ஆசிரியர் வலம் மிக்க பாடசாலைகளுக்கு வழங்குவதனை விடுத்து இப்பாடசாலைகளுக்கு நியமனம் வழங்குவது அவசியமாகும். ஒரு பாட ஆசிரியரையே முழுபாடத்தினையும் கற்பிக்கின்றார். மற்றும் மாணவரது அறிவு விருத்தியில் ஆரம்ப பாடசாலை என்பது மிகமுக்கியமாகும். இதனை கருத்திற் கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் ஆரம்ப பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் இப்பிரதேசத்தில் குறைந்தது க.பொ.த சாதாரணத்தையும் கற்கும் வரை இப்பாடசாலைகள் அமைப்பதற்கு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பிரதேச மக்களது கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படுகின்றது என்றே கூறலாம். தரம் 4 வரை கற்கும் பாடசாலைகள் இருந்து எப்பிரயோஜனமும் இல்லை. அத்துடன் இளவயது திருமணத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் மாணவர்களை வேலைக்கு அமர்த்துவோர்க்கு தண்டனை வழங்குவது அவசியமாகும்.

மாணவர்கள் தமது வறுமை காரணமாகவும் பெற்றோர்கள் பாடசாலைகளுக்கு அனுப்புவது குறைவு. இதனை தீர்க்கும் முகமாக மாணவர்களுக்கு ஊக்குவிப்புத்தொகை, தேவையான பாடசாலை உபகரணங்கள் வழங்குவதும் சிறந்த விடயமாக அமையும். மேலும் பல மாணவர்கள் கல்வி கற்க விரும்பி தமது உறவினர்களின் வீடுகளில் தங்கி நிற்கின்றதாக கூறுகின்றனர். இப்பிரதேச மாணவர்கள் தங்கி வேறு இடங்களில் கற்பதற்கு விடுதி வசதிகள் வழங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

இன்றையே சிறுவர்களே நாளையே தலைவர்கள் என்பதனை கருத்திற் கொண்டு இப்பிரதேச மக்களது கல்வி தொடர்பாகவும் சிந்திப்பது அவசியமாகும்.இப்பிரதேசத்திற்கு பொறுப்பாக உள்ள வலயக்கல்வி பணிப்பாளர், பிரதேச செயலாளர் அக்கறை செலுத்துவது அவசியமாகும். 2050 ஆண்டு வரை சென்றாலும் இப்பிரதேச பாடசாலைகள் அபிவிருத்தி அடையாத நிலையே காணப்படும். திறமைமிக்க மாணவர்கள் காணப்படுகின்றனர். அவர்களது எதிர்காலம் சிறறந்ததாக அமைய நடவடிக்கை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும். இப்பிரதேச அபிவிருத்தியினை மேற்கொள்ளும் போது எமது வலயமானது கல்வியில் முன்னோக்கிய வலயமாக வரக்கூடும். அனைவருக்கும் வளங்கள் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அப்போது சமத்துவம் என்பது சாத்தியமாகும்.


பொ.சர்ஸ்னி
2ம் வருடம், சிறப்பு கற்கை
கல்வி பிள்ளை நலத்துறை
கலைகலாசாரபீடம்
கிழக்கு பல்கலைக்கழகம்.