கிழக்கு பல்கலைகழக ( 1981-82) முதலாவது பழைய பல்கலைகழக மாணவ அணியின் ஒன்றுகூடல் நிகழ்வு




கிழக்கு மாகாணத்தில் முதல் கிழக்கு பல்கலைகழகமான 1981ஆம் ஆண்டு  வந்தாறுமூலை கிழக்கு பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்டு   பல்கலைகழகத்தில்  81/82 ஆண்டில் முதல் முறையாக இணைத்துக்கொள்ளப்பட்ட பழைய  பல்கலைகழக மாணவ அணியின்   ஒன்றுகூடல் நிகழ்வு மட்டக்களப்பில்  நடைபெற்றது.


வந்தாறுமூலை கிழக்கு பல்கலைகழகத்தின் பழைய மாணவனும்  மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளருமான  வி .மயில்வாகனம்  தலைமையில் நடைபெற்ற 81/82  ஆண்டு  பல்கலைகழக  மாணவ அணியின்   ஒன்றுகூடல் நிகழ்வில்  கிழக்கு  பல்கலைகழக உபவேந்தர் பேராசிரியர் டி .ஜயசிங்கம்  பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் கே .கனகரெட்ணம் தெரிவிக்கையில் இந்த  ஒன்று கூடல் நிகழ்வானது  ஆறு நோக்கங்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது .இதனை எதிர்காலத்தில் செயல்படுத்தும் வகையில் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

இது தொடர்பாக தெரிவிக்கையில் 34 வருடங்களுக்கு பின் ஒன்று சேர்ந்தமை , எதிர் காலத்தில் இறுக்கமான பிணைப்பினை ஏற்படுத்தல் ,வித்தாக சென்றபோது முளையாக மாற்றிய  .பெறுமதி மிக்க விரிவுரையாளர்கள் கௌரவித்தல் ,சக்திமிக்க  பலமான அமைப்பை உருவாக்குதல் , இந்த அமைப்பின் ஊடாக பல்வேறு கல்விசார் வேலைத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவது கிழக்கு பல்கலைகழகத்தில்  81/82 ஆண்டில் முதல் முறையாக இணைத்துக்கொள்ளப்பட்ட பழைய  பல்கலைகழக  மாணவ அணியின்   தொடர்ச்சியான ஒன்றுகூடல் நிகழ்வினை நடாத்துவது போன்ற ஆறு நோக்கங்களை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது
இந்நிகழ்வில் 81/82  ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு  பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற மாணவர்களான  தற்போதைய  பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் , பேராசிரியர்கள் , மாகான ,மற்றும் மாவட்ட கல்விப் பணிப்பாளர்கள் ,  பாடசாலை அதிபர்கள் , வைத்தியர்கள் என 81/82  ஆண்டு கிழக்கு  பல்கலைகழக  மாணவ அணியினர் கலந்துகொண்டனர்