கோட்டைக்கல்லாற்றில் சுவாமி விவேகானந்தரின் 157வது பிறந்ததின நிகழ்வும் அறநெறி பாடசாலை பரிசளிப்பு விழாவும்



ரவிப்ரியா

கோட்டைக்கல்லாறு அறநெறி பாடசாலையின் சுவாமி விவேகானந்தரின் 157வது பிறந்ததினநிகழ்வும் மாணவர்களுக்கான பரிசளிப்ப விழாவும் ஞாயிற்றுக்கிழமை (17) காலை அதிபர் ந.இராசரெத்தினம் தலைமையில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மண்டபத்தில்நடைபெற்றது.

பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியாவில்வரெத்தினமும் சிறப்பு அதிதிகளாக ஆலயங்களின் வண்ணக்கர் மு.தம்பிராசாவும், நிருவாகஉததியோகத்தர் வே.தவேந்திரன் இந்துசமய கலாசார உத்தியோகத்தர் திருமதிகு.பரமசிவம்,ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர் க.ருத்திராகணேஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர். கௌரவ அதிதிகளாக பிரதேச ஆலயங்களின் தலைவர்கள் அதிபர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுவாமி விவேகானந்தரின் பூஜை மற்றும் வழிபாடு, மலரஞ்சலியைத் தொடர்ந்து சுவாமிவிவேகானந்தரின் பக்திப் பாடல்கள் ஓதப்பட்டு மாணவர் மற்றும் அதிதிகளின் உரையடன் அதிதிகள்கௌரவிக்கப்பட்டு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு நடைபெற்றது.

புpரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசிய பிரதேசசெயலாளர் திருமதி சிவப்பிரியா பின்வருமாறுகுறிப்பிட்டார் சுவாமி விவேகானந்தரின் வழிகாட்டல்கள இன்றைய சமுகத்திற்கும் குறிப்பாகஇளைஞர்களுக்கும் மிகவம் காத்திரமானது.

அவர் இளைஞர் சக்தியை நன்கு உணர்ந்தே அதற்கேற்றவாறே செயற்படட்டவர். அவர்களுக்குசரியான இலக்கை அடைவதற்குரிய சகல வழிவகைகளையும் காட்டியவர். எனவே அன்னாரைநினைவு கூரும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட இவ்விழா பெறுமதிமிக்கது.

ஏழேழு பிறப்புக்குமான கல்வியை நாம் சிறார்களுக்கு ஊட்ட வேண்டும். பிச்சை புகினும் கற்கைநன்றே என்றே கூறப்படுகின்றது. கல்விக்கான முக்கியத்துவம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டஒன்றாகவே காணப்படுகின்றது. அதிலும் அறநெறி கல்வி என்பது அனைத்து மதங்களாலும் நன்குபின்பற்றப்பட்டு வருகின்றது.

எமது கல்வித்திட்டத்தில் ஒழுக்கம் உள்ளடக்கப்படவில்லை. எனவே மாணவர்களைப்பொறுத்தவரையில் அற நெறிக் கல்வியே உச்சமாக ஒழுக்கத்தை போதிக்கின்றது. ஒழுக்கமில்லாதகல்விpயால சமூகத்திற்க எந்தவித பயனும் கிடைக்கப் போவதில்லை.;

ஓரு அறநெறி பாடசாலையை பன்னெடுங்காலமாக வெற்றிகரமாக நடாத்துவதென்பது மிகவும்பாராட்டுக்குரியது. தனது ஓய்வநிலையை முற்றுமுழுதாக அறநெறிக்கு அர்ப்பணித்துச் செயற்படும் அறநெறிப்பாடசாலையின்  அதிபர் அவர்களின் சமய பற்றுடன் கூடிய நட்வடிக்கைகள்மெச்சத்தக்கவை. முன்மாரியானவை. எனவே சேவைகளில் இருந்து ஓய்வபெறும் ஒவ்வொருவரும்தங்களது இரண்டாம் கட்ட வாழ்க்கை நடவடிக்கையாக அறநெறி கல்வி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பதன்மூலம் சிறந்ததொரு சமூகக் கட்டமைப்பை ஏற்படுத்தலாம். இது இன்று காலத்தின் கட்டாயத்தேவையாக இருக்கின்றது.

பெற்றோரும் உணர்ந்து அறநெறி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்து மதத்திலவாழ்க்கைக்கு தேவையான் சொல்லப்படாத விடயங்கள் எதுவுமில்லை. அனைத்துமே ஒழக்கநெறியைப் பின்பற்றியதாகவே இருக்கின்றது. இன்று சமூகத்தில் ஒழுக்க நெறிகேள்விக்குரியதொன்றாகவே வேகமாக மாறிவருகின்றது.

உயர்ந்த நிலை ஆளுமை கொண்ட சிறந்த ஒழுக்க நெறியை பின்பற்றுகின்ற ஒரு சமூகக்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆயுதம் அறநெறிக் கல்வியே என்பதில் மாற்றுக் கருத்துக்குஇட்மிருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

ஆலயங்களின் வண்ணக்கர் மு.தம்பிராசா தனதுரையில் கோட்டைக்கல்லாற்றில் அறநெறிக் கல்வியைநிலை நிறத்துவதில் அதிபர் இராசரெத்தினம் மிகவும் திறமையாகச் செயற்பட்டுவருகின்றார்.அவரைப் பாராட்டுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை என்று குறிப்பிட்டார்.

புpரதி அதிபர் இராஜேந்திரன் தனதுரையில் இன்று எமக்கு பாரிய சவாலாக போதை வஸ்துதற்கொலை என்பன காணப்படுகின்றது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள்நடாத்துவதைத் தவிர்த்து மாணவர்கள் கட்டாயம் அறநெறி பாடசாலைக்குச் செல்லம் நிலைஉருவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலகம். புpரதேச சபை சமூகஅமைப்புக்கள் என்பன சட்ட ரீதியாகவம் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் ஆலயங்களின் வண்ணக்கர்மு.தம்பிராசா மற்றும் இந்து சமய கலாசாரஅபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கு.பரமசிவம்ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படடனர்.

புpரதம அதிதி மற்றும் சிறப்பு கௌரவ அதிதிகள்; மற்றும் அன்னை சாரதா மகளிர் மன்ற நிர்வாகிகள்ஆகியோரால் அறநெறி மாணவர்களுக்கு மாவட்ட மற்றம் மாகாண மட்டத்தில் வெற்றிபெற்ற சான்றிதழும் பரிசும் வழங்கிவைக்கப்பட்டன.

இக்கால சமயகுரவராக மக்களால் அடையாளப்படுத்தப்படுகின்ற மதிக்கப்படுகின்ற அறநெறிபாடசாலை அதிபர் ந.இராசரெத்தினத்தின் சிறந்த நெறிப்படுத்தலில் ஆளுமையில்;ஒழுங்கமைக்கப்பட்ட அலட்டிக்கொள்ளப்டாத ஆக்கபூர்வமான எளிமையான இந்த நிகழ்வு சுமாமிவிபுலானந்தரின் பெயர் தாங்கி நடாத்தப்பட்டது பாராட்டுக்குரியது என சமய ஆர்வலர்கள்தெரிவிக்கின்றனர்.