புனித மிக்கேல் கல்லூரி கூடைப் பந்தாட்ட அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.

மட்டக்களப்பு கூடைப்பந்து சம்மேளனம் (BDBA) ஒழுங்குசெய்த 14 வயதின் கீழ்ப்பட்ட  பாடசாலை   அணிகளுக்கிடையிலான  அழைப்புக்  கூடைப்பந்து தொடரில்  புனித மிக்கேல் கல்லூரி அணி  சம்பியனாக முடி சூடியது.

தொடரில் நாடுபூராகவும் இருந்து 12 பாடசாலைகள் அணிகள் பங்குபற்றியிருந்தன. போட்டி நிகழ்வுகள் சனி,ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய தினங்களில் சிவானந்தா கூடைப்பந்து மைதானம், மியானி  கூடைப்பந்து அரங்கு மற்றும் புனித மிக்கேல் கல்லூரி கூடைப்பந்து அரங்கு போன்ற இடங்களில் போட்டிகள் நடைபெற்றன.


 இறுதி நாள் போட்டிகள் புனித மிக்கேல் கல்லூரியின் கூடைப்பந்து அரங்கில் நடைபெற்றன. இதில் மூன்றாம் இடத்திற்காக யாழ் / இந்துக் கல்லூரி அணியும் மட்/ புனித ஜோசப் கல்லூரி அணியும் மோதிக்கொண்டன. மூன்றாம் இடத்தினை யாழ்/இந்து கல்லூரி அணி தனதாக்கியது. இறுதி போட்டியில் திருகோணமலை புனித ஜோசப் கல்லூரி அணியும் மட் / புனித மிக்கேல் கல்லூரி அணியும் மோதின. விறுவிறுப்பாக  இடம்பெற்ற இப்போட்டியில் 56: 37 என்ற புள்ளிகள் கணக்கில் மட் /  புனித மிக்கேல் கல்லூரி அணியினர் தொடரின் சம்பியனாக முடி சூடிக் கொண்டனர். புனித மிக்கேல் கல்லூரி அணியின் சிறப்பான வெற்றிக்கு கல்லூரியின் ஆசிரியரும், பயிற்றுவிப்பாளருமான  ஆபிரகாம் சந்துரு அவர்கள் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 வெற்றிக் கிண்ணமானது பிரதம விருந்தினராக கலந்துகொண்ட  பாராளுமன்ற உறுப்பினர் ஞா.  ஸ்ரீநேசன் அவர்களால் வழங்கப்பட்டது.

அணியின் சிறந்த வீரராக   கி.அ.அக்ஷய் அவர்களும் , சிறப்பான தடுப்பாளராக    கே. சரண்யூ அவர்களும் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தனர்.

இந்நிகழ்வில் மிக்கேல் கல்லூரியின் அதிபர்  பயஸ் ஆனந்தராஜா அவர்களும், குருக்கள், BDBA உறுப்பினர்கள் , வர்த்தகர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள்  பங்கு பற்றி அணி வீரர்களை கௌரவப்படுத்தியமை சிறப்பாக அமைந்திருந்தது.