கல்முனையில் நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறைக்காக பாதிக்கப்பட்ட பெண்களை வலுவூட்டும் கருத்தரங்கு




ரவிப்ரியா

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மகளிர் அபிவிருத்தி மன்றம் கண்டி மகளிர்அபிவிருத்தி நிலையத்துடன் இணைந்து கல்முனை எஸ்.எல்.ஆர் மண்டபத்தில் மகளிர் அபிவிருத்திமன்ற தலைவி திருமதி ரூத்சந்திரிகா சுரேஸ் தலைமையில கல்முனையில் நிலைமாறுகால நீதிக்கானபொறிமுறைக்காக பாதிக்கப்பட்ட பெண்களை வலுவூட்டும கருத்தரங்கு புதனன்று மாலை வெகுசிறப்பாக நடைபெற்றது. பிரச்சனைகளை இனம் கண்டு கலந்துரையாடி வழக்காடுதல் என்றதொனிப்பொருளில் ஆரம்பமானது.

இக்;கலந்துரையாடலில் கண்டி பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் திட்ட இணைப்பாளர் செல்விசியாமளர் மற்றும் உத்தியோகத்தர் அஸ்வினி ஆகியோர் கலந்து கொண்டு கலந்தரையாடலைநெறிப்படுத்தினர்.

மேலும் அருட்திரு வினோத் சபாபதி டாக்டர் திருமதி புஸ்பலதா லோகநாதன். அதிபர்களானபிரபாகரன், டேவிட் ஆகியோரும். டெப்லிங் கல்முனை பிரதேச இணைப்பாளர் பாஸ்கர், வங்கிஅதிகாரியும் எழுத்தாளருமான எஸ்.அரசரெட்ணம், நற்பிட்டிமுனை கிராம உத்தியோகத்தர் திருமதிசிவாஜினி ஆகிய துறைசார் முக்கியங்தர்களும் கலந்து கொண்டனர்.

அத்துடன் மகளிர் அபிவிருத்திமன்ற உபதலைவர் திருமதி தவசாந்தி விக்கினேஸ்வரன், உபசெயலாளர் செல்வி ஆர். ஆத்மிகா ஆகியோருடன் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாகநற்பிட்டிமனையைச் சேர்ந்த திருமதி பூமணி மற்றும் சிறிமாலினி, பாண்டிருப்பைச் சேர்ந்தவிஜிதா,மற்றும் திருமதி சாந்தி ஆகியோரும் பங்கேற்றனர்.

கலந்துரையாடல் ஆரம்பத்தில் கல்முனை மகளிர் அபிவிருத்தி மன்றம் தொடர்பாக, இரத்தினச்சுருக்கமாக அதன் தலைவி திருமதி ரூத் சந்திரிகா சுரேஸ் தெளிவு படுத்தினார். சுனாமியை தொடர்ந்துஅதற்கான பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை பொறுப்பேற்று திறம்பட பூர்த்திசெய்ததாக தெரிவித்தார். அத்துடன் அங்கத்தவர்களுக்கான மாதாந்த சேமிப்பு ரூபா இருபது இன்றுஅங்கத்தவர்களின் தேவைக்காக இலட்சக் கணக்கில் கடன் வழங்குவதற்கு வளர்ச்சி பெற்றுள்ளதாகதெரிவித்தார். சிறந்த கட்டமைப்புடனும் சீரான வலைத் தொடர்புடனும் மன்றம் செயற்படுகின்றது.எமது பெண்கள் சகல துறைகளிலும் வலுப்படுத்தும் கருத்தரங்குகள், பயிற்சிகள் தொடர்ந்துசெய்யப்பட்டுவருவதாகவம் தெரிவித்தார். இது நல்ல பெறுபேறுகளை அளித்துள்ளதாகவும்தெரிவித்தார். இவர் கூற்றுக்கு ஆதாரமாக சமூகமளித்த அங்கத்தவர்களின் செயற்பாடுகளைஅவதானிக்க கூடியதாக இருந்தது.

கண்டி பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் தமிழ் திட்ட இணைப்பாளர் சியாமளா தங்கள் பணிகள்பற்றி சிறப்பாக குறிப்பிட்டார். காணாமல் போன கணவனை கொண்ட குடும்ப தலைவிகளை சகலதுறைகளிலும் வலுவூட்டுவதற்கும் இவர்களின் தேவைகளை இனம் கண்டு இதற்கானநடவடிக்கைகளை மேற் கொள்வதும் உரிய நிறுவனங்களோடு அவர்களை தொடர்வுபடுத்துவதும்தொடர்புகளை இலகுபடுத்துவதும் எமது முக்கிய இலக்கு. இது தொடர்பாக 8 மாவட்டங்களில் எமதுசெயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மொழி மத இன வேறுபாடின்றி எவ்வித அரசியல்கலப்புமின்றி மூவினத்தினரும் பயனடையும் வகையில் இலங்கைபூராகவும் செயற்பட்டுவருகின்றோம். சிறந்த வலையமைப்புடன் எமது செயற்பாடுகள் குறிப்பாக பெண்கள் சிறுவர்களைமையப்படுத்தி எவ்வித வேறுபாடுமின்றி நடைபெற்றுவருகின்றது.

பாலியல் பலாத்காரங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான காப்பகம் ஒன்றை நாம் கண்டியில்வெற்றிகரமாக நடாத்தி வருகின்றோம். அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் நல்லமுறையில் பராமரித்து வருகின்றோம். கல்விக்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்அரசிடம் கூட இத்தகைய காப்பகம் இருப்பதாகத் தெரியவில்லை.

காணாமல் போனோர் தொடர்பாக அரசு அவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா இல்லையா என்பதைதுரிதமாக வெளிப்படுத்த வேண்டும். இது இன்று மக்கிய அவசர தேவையாகவே இனம்காணப்பட்டுஇருக்கின்றது. அதன் முலமே பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வ பற்றி சிந்திக்கக் கூடியதாகஇருக்கும். அவ்வாறு உயிருடன் இல்லையென்றால் உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.விடை தெரியாத நிலையில் அவர்களின் இளமைக்காலம் வீணடிக்கப்பட்டுவிட்டது வாழ்க்கையின்முக்கிய பகுதியை இழந்துவிட்டார்கள். அது மிகவும் சிக்கலான விடயமாகும் எனவே நாம் அரசிடம்காணாமல் போனோர் அலுவலகம் ஒன்றை அம்பாறையிலும் அமைத்து அதன் பணிகளைவிரைவபடுத்தமாறு கோரிக்கைவிடுக்கின்றோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பங்குபற்றிய தறைசார் அனுபஸ்தர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிகிர்ந்;து கொண்டனர்.நெஞ்சைத் தொட்ட அவர்களின் போர்க்கால அனுபவங்கள் பின்வருமாறு. சக ஊழியர் ஒருவருக்குநேர்ந்த அவலம் பற்றி ஒருவர் தெரிவிக்கையில் தங்களோடு பணிபரிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும், மெலும் தான் உட்பட இன்னொருவரும் ஏககாலத்தில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தோம். ஆனால் பாதுகாப்பு உத்தியோகத்தர் இன்றுவiர் வீடு திரும்பவில்லை. இறுதியில்போலியான காரணத்தை முன்வைத்து பெறப்பட்ட இறப்பு சான்றிதழை முன்வைத்து பணிபரிந்தஇடத்திலிருந்து ஓரளவ சட்டரீதியான கொடுப்பனவுகளை அன்னாரின் குடும்ப்பத்திற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இன்னுமொரு நிபுணத்துவ சகோதரி கருத்துத் தெரிவிக்கையில், போர்க்காலச் சூழலில் பாலியல்பலாத்காரம் மூலம் கருத்தரித்து பிரசவித்த தன் குழந்தைக்கு பாலூட்ட மறுத்த கொடுமையை நேரில்தரிசித்ததாகத் தெரிவித்தார். காணாமல் போன கணவர் அல்லது விதவைப் பெண்கள் சுயமாகவாழ்வாதாரத்திற்காக சதந்திரமாக உழகை;கும்போது இதை சமூகம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கம்அவலமும் இருப்பதாகத் தெரிவித்தார். சிறார்கள் மன உழசை;சலுக்கும் பெண்கள் பாலியல்தேவைக்கான மன உழசை;சலில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். பூர்த்தி செய்ய முடியாத மனஉளச்சலுக்கும் உட்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இன்னுமொரு சகோதரி கருத்து தெரிவிக்கையில்