உலக தாய்மொழி தின நிகழ்வில் ஈழத்து கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இ. ஜெயராஜ்


(சிவம்)

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள தாய்மொழி தினம் - 2019  கல்லடிப் பாலம் அருகில் உள்ள மீன் இசைப் பூங்காவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) மாலை 3.00 மணிக்கு நடைபெறும்.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி;சரவணபவன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் ஈழத்து கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இ. ஜெயராஜ் சிறப்புச் சொற்பெருக்காற்றவுள்ளார்.

ஆரம்ப நிகழ்வாக கல்லடிப் பாலத்தருகில் அமைந்துள்ள ஓளவையார் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அதிதிகள் ஊர்வலமாக விழா நடைபெறும் இடத்திற்கு அமைத்துச் செல்லப்படுவர்.

தமிழ் மொழி வாழ்த்தை சு.தரேந்திரனும் வரவேற்பு நடனம் மற்றும் காற்சிலம்பு நடனத்தை மட்டக்களப்பு கலைக்கோகிலம் மாணவர்கள் வழங்குவர்.

வரவேற்புரையை மாநகரசபையின் கலைக் குழுத்தலைவர் வே.தவராஜா, தமிழ்மொழி இன்னும் இனியும் தலைப்பில் அருட்தந்தை அ.அ. நவரட்ணம் நவாஜி, கவிதைப்பொழிவுகள். அண்ணாதாசன் கி;துரைராசசிங்கம் மற்றும் கதிரவன் த. இன்பராசா

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் மற்றும் முன்நாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) வாழ்த்துரையை வழங்குவர்.

நன்றியுரையை மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பு ஜீ. எழில்வண்ணன்


;