இன்றைய வானிலை!





நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு, வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40–45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.