பால்மாவின் தரம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை




பால்மாக்களில் அடங்கியுள்ள சேர்மானங்கள் விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைள் மூலம் அமைச்சு அதனை உறுதிசெய்திருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்தசேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தரம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இதுவரை முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு சோதனையிலும் உடல் நலத்துக்கு கேடு  விளைவிக்கும்  எவ்வித பொருட்களும் இல்லையென நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சர் மற்றும் நிபுணர்கள் குழுவினர் தெரிவித்தனர் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.

இது அரசியல்ரீதியான பிரச்சினை அல்ல நாட்டின் திரவப்பால் உற்பத்திபத்து வீதமாகும். ஏனைய 90 வீதம்பால்மாவின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இலங்கையில் விற்பனை  செய்யப்படும்  பால்மாக்களில் விலங்கு எண்ணெய் அடங்கியிருப்பதாக போலியான தகவல்கள் பரப்பப்பட்டு
வருகின்றன.

இது அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்படும் செயல் எனவும் அமைச்சர் ராஜித்த சேனராட்ன தெரிவித்தார். இது விஞ்ஞான பூர்வமான தேயன்றி அரசியல் ரீதியானதல்ல. இது போஷாக்குடன் தொடர்புபட்ட விடயம். அதனைவிடுத்து பால் மா நாட்டுக்கு தேவையா? அல்லது இல்லையா? என்பதல்ல. பால்மா கம்பனிகள் மீதான அக்கறையால் பால்மாவை, அமெரிக்கா சிபாரிசு செய்தபோதும் பிறந்த சிசுக்களுக்கு தாய்ப்பாலே சிறந்தது என்பதனை அங்கீகரிப்பதற்காக அமெரிக்காவுக்கு நான், பாரிய அழுத்தத்தை மேற்கொண்டதாகவும் அமைச்சர் கூறினார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர். அனில் ஜாசிங்க உள்ளிட்ட பலர் இந்த செய்தியாளர் மகாநாட்டில் கலந்துகொண்டனர்