வவுணதீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட கணேஸ் தினேஸ் அவர்களின் சகோதரிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு.


வவுணதீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட கணேஸ் தினேஸ் அவர்களின் சகோதரிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மட்டக்களப்பு வவுணதீவு காவலரணில் வைத்து இனம் தெரியாத நபர்களால் கணேஸ் தினேஸ் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர்களது வீட்டுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் கோல்டன் பெர்னான்டோ, ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் சுரேந்திரன் ஆகியோர் தமது ஆறுதலை தெரிவித்ததுடன் ஜனாதிபதியின் இரங்கல் செய்தியை வழங்கியதுடன் அவாரது சகோதரிக்கு வேலை இல்லா பிரச்சினையை அறிந்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். அதன் பயனாக இன்று [15.02.2019] ஜனாதிபதியால் அரச வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை முயற்சி செய்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களுக்கும் ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் கோல்டன், பிரதேச சபை உறுப்பினர் சுரேந்திரன் ஆகியோருக்கு குடும்பத்தார் நன்றிகளை தெரிவித்தனர்.