இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டத்தரணியாக ச. சசிகுமார் உயர்நீதிமன்றத்தினால் சத்தியபிரமாணம்




பா.மோகனதாஸ்

களுவாஞ்சிக்குடி சரஸ்வதி மற்றும் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் ஆரம்பக் கல்வியினையும் சாதாரண உயர்தரத்தினை மட்டு சிவானந்தா தேசிய பாடசாலையிலும் கற்றுத் தேறி கிழக்குப் பல்கலைக்கழக விவசாய இளமாணி கற்கைக்கு தேர்வாகி பட்டத்தை பூர்த்தி செய்துள்ளதுடன் முதுமாணி பட்டப் பின் படிப்பினை பேராதனை பல்கலையில் நிறைவு செய்து விவசாய முதுமாணியானார்.

இடையறாது ஆறு வருடங்கள் ஆசிரியராக கடமையாற்றிய இவர், இலங்கை திட்டமிட்டல் சேவை பரீட்சையில் சித்தியடைந்து திட்டமிடல் சேவை அதிகாரியாக கடந்த பத்து வருடகாலமாக செயற்பட்டு வருவதுடன் தொடர்ந்து இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டமாணி நுழைவுப் பரீட்சையில் சித்தியடைந்து சட்டமாணி பட்டத்தினை பெற்றதுடன் இலங்கை சட்டக்கல்லூரியில் மேற் கல்வியை நிறைவு செய்து உயர்நீதிமன்றில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.