களுதாவளை தேசியப்பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்




செ.துஜியந்தன்

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகாவித்தியாலயம் தேசியப்பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பாடசாலைக்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அதிபராக க.சத்தியமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். 

களுவாஞ்சிகுடியைச்சேர்ந்த இவர் 1998 இல் ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்டவர். மகிளுர் சரஸ்வதி மகா வித்தியாலயம், தேற்றாத்தீவு மகா வித்தியாலயம், களுதாவளை மகாவித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராக சேவையாற்றியுள்ளார்.

2012 இல் அதிபர் சேவையில் இணைந்து கொண்டவர். பிரதியதிபராக களுதாவளை மகாவித்தியாலயத்தில் சேவையாற்றியவர் பின்னர் குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயத்தில் 2014 முதல் அதிபராக சேவையாற்றியுள்ளார். இவரது காலத்தில் குருமண்வெளி சிவசக்திமகாவித்தியாலயம் தேசிய மற்றும் மாகாணரீதியில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. பாடசாலைக்கு பல்வேறு பௌதீகவளங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

இவர் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் பல்வேறு சமய, சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகின்றார். இந் நிலையில் களுதாவளை மகாவித்தியாலயம் தேசியப்பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இப்பாடசாலையின் முதல் அதிபராக க.சத்தியமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மறைந்த தந்தையார் கணபதிப்பிள்ளையும் அதிபராக சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.