மொழிசார் தொழிலுக்கு ஏற்ற திறன் அபிவிருத்திக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு











வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவலங்கள் அமைச்சின் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் நடாத்தும் மொழிசார் தொழிலுக்கு ஏற்ற திறன் அபிவிருத்திக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது

கலாசார மற்றும் கலை அலுவலங்கள் அமைச்சின் 2019 ஆண்டுக்கான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டப் பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கான கலாசார மற்றும் கலை அலுவலங்கள் அமைச்சினால் சான்றிதழ்களும் ,பயிற்சிகளை வழங்கிய வளவாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது .

கலாசார மற்றும் கலை அலுவலங்கள் அமைச்சினால் ஆண்டு தோறும் படித்துவிட்டு இருக்கின்ற மாணவர்களுக்கு திறன் அபிவிருத்திக்கான பத்து மாதங்கள் கொண்ட பயிற்சி நெறியினை வழங்கி அவர்களுக்கான மொழிசார் தொழிலுக்கு ஏற்ற திறன் அபிவிருத்தியை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் இரண்டாம் மொழி கல்வியான , சிங்களம் ,ஆங்கிலம் , மற்றும் சாஸ்திரிய சங்கீதம் , இசைக்கருவி பயிற்சி , சாஸ்திரிய நடனம் , பாரம்பரிய நடனம் , யோகா சிகிச்சை , நாடகமும் அரங்கியலும் ,மிருதங்க இசை போன்ற பயிற்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றன

மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி அமலினி ரஞ்சித்குமார் தலைமையில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அதிதிகளாக ஓய்வுநிலை அதிபர் ஆர் ..கனகசிங்கம் ,,கிழக்கு பலைகலைக்கழக நிலைய விரிவுரையாளர் பி எஸ் .ஜெயசிங்கம் , , இராணுவ அதிகாரிகள் மற்றும் நிகழ்வில் பயிற்சி நெறிகளுக்கான வளவாளர்கள் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர்