கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு




மட்டக்களப்பு மாநகர சபையின் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது

இதன் கீழ் மட்டக்களப்பு எல்லைப்புற பாடசாலைகளை கல்வி பயிலும் வரிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அப்பியாச கொப்பிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இதன் கீழ் மட்டக்களப்பு திராய்மடு தமிழ் பாடசாலை மற்றும் மட்டக்களப்பு திராய்மடு நாவலடி நாமகள் வித்தியாலய மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் நேற்று  வழங்கி வைக்கப்பட்டன .

ஆரம்ப நிகழ்வாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களினால் அதிதிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டன .இதனை தொடர்ந்து அதிபர்களின் தலைமையுரையுடன் மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் நிகழ்வு நடைபெற்றன

இந்நிகழ்வில் அதிதிகளாக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் ,மாநகர சபை உறுப்பினர்களான டி ஸ்ரீதரன் ,இரா அசோக் மற்றும் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .