தேர்தலை பிற்போடுமாறு தன்னிடம் தெரிவிப்பவர்களே தேர்தலை நடத்துமாறும் தெரிவிக்கின்றனர்



மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரி, பகிரங்கமாக கதைக்கும் சில கட்சிகளின் உறுப்பினர்கள் இந்தத் தேர்தலை பிற்போடுவது நல்லதென்று தன்னிடம் நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவிப்பதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று கண்டியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கட்சியின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றமைக்கான காரணம் கட்சிகளின் உண்மையான வாக்கு பலம் வெளிபடுவதற்கு அவர்கள் விருப்பமின்மையே இதற்கான காரணமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று மாகாணசபைத் தேர்தல் குறித்து கூச்சலிடுபவர்கள் 1987ஆம் ஆண்டு இந்த மாகாண சபைகளை உருவாக்க எதிர்ப்பையும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பையும் தெரிவித்தவர்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் மட்டுமல்ல எந்தவொரு தேர்தலுக்கும் தான் தயாரென்றும் தெரிவித்துள்ள அவர், மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கான தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லையென்றும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.