புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் கிரிக்கட் போட்டி




மட்/ புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் (BT/ST.CECILIA’S GIRLS’ COLLEGE BATTICALOA) பழைய மாணவர் சங்கத்தினால் (Ex-Cecilians Association) CECILIAN PREMIER LEAGUE (CPL) எனும் பெயரில் கிரிக்கட் போட்டி 2019.02.19 அன்று மட். இந்துக்கல்லூரி மைதானத்தில் நடாத்தப்பட்டது.

இப் போட்டியானது இப்பாடசாலையின் பழைய கிரிக்கட் வீராங்கனைகள் மற்றும் பாடசாலையின் கிரிக்கட் வீராங்கனைகளுக்குமிடையே நடாத்தப்பட்ட ஒரு சிநேகபூர்வமான கிரிக்கட் சுற்றாகும்.

இந் நிகழ்விற்கு மட்.புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் அதிபர், உடற் கல்வி ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் , பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மற்றும் பெற்றோர்கள் அனைவரும் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய அணிகளுக்கு வெற்றி கேடயங்கள் வழங்கி ஊக்கவிக்கப்பட்டது. இப்போட்டியானது வருடத்துக்கு ஒரு முறை நடாத்தப்படுவதன் மூலம் விளையாட்டில் கலந்து கொள்ளும் மாணவர்களை உற்சாகப்படுத்த முடியும் என்ற நோக்குடன் தங்களது கருத்துக்களை தெரிவித்த பழைய மாணவர் சங்கத்தினர், இப்போட்டியை தொடர்ச்சியாக பொறுப்பேற்று மேலும் சிறப்பாக நடாத்துவதற்கும் தீர்மானித்துள்ளனர்.