நகரத்துக்குள் மக்களுக்கு இலவச பஸ் சேவையை ஆரம்பிக்கும் மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன்




கனகராசா சரவணன்

மட்டக்களப்பு முச்சக்கரவண்டி சங்கங்கள் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வரமால்; சட்டத்துக்கு முரணாக மேலும் மேலும் செயற்படுமாயின் மாநகரசபை பெறுப்பெடுத்து மிக விரைவில்; நகரத்துக்குள் இலவச பஸ்  சேவையை ஆரம்பிக்கும். என மட்டடக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாநகர மேயர் செயற்படுவதை கண்டித்து முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்திலுள்ள முச்சக்கர வண்டி சாரதிகளினால் இடம்பெற்ற ஆர்பாட்டம் தொடர்பாக மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு அதரிவித்தார்

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் பல விதமான அபிவிருத்தி செயற்பாடுகளையும் பல சமூகம் சார்ந்த செயற்பாடுகளையும் செயற்படுத்தி வருகின்றோம் அந்த வகையில் முச்சக்கரவண்டி ஓட்டுனர் சம்மந்தமாக பல முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றது பல முச்சக்கரவண்டி சாரதிகள் பலர் நியாயமாக நடந்துகொண்டாலும் சிலரது செயற்பாடு மக்கள் எங்களிடம் முறையிடக் கூடியதாக இருந்தது.

அந்தவகையில் முச்சக்கரவண்டி சங்கங்களுடன் பேசவேண்டும் என எமது மாநகரசபை ஆணையாளர் ஒருவாரத்துக்கு முன்னர்; அவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் அவர்கள் கலந்;து கொள்ளாது 7 முச்சக்கரவண்டி செலுத்துபவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஆணையாளர் அனைவரையும் அழைக்கவேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக முச்சக்கரவண்டி சங்கம் முச்சக்கரவண்டி சாரதிகளை கலந்து ரையாடலுக்கு வருமாறு பகிரங்க அறிவித்தல் விடுத்திருந்தாh.; இதனையடுத்து கடந்த 19 ம் திகதி அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் ஒரு சிலர் வந்திருந்தனர் வெளியில் ஒரு சிலர் நின்றனர்.
சந்திப்பிற்கு வருபவர்கiளின் பெயர்கள் பதிவது வழக்கம் ஆனால் உள் வந்தவர்கள் பதிந்தார்கள் ஆனால் ஓட்டோ சங்கம் என்று செல்லுபவர்கள் நாங்கள் பதியமாட்டோம் பதியாமல் உள்ளுக்குவருவோம் என்றனர்.

இந்த நிலையில் ஆணையாளர் கூட்டத்திற்கு வருகைதந்தவர்களுடன் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகரசபை கட்டளைச் சட்டம் 372-; 32ம் பிரிவின்படி அனைத்து முச்சக்கரவண்டி சாரதிகளும் தமது வியாபார நடவடிக்கையில் மாநகரசபையில் பதியப்படவேண்டும் என சில விதிமுறைகளை விதித்தோம்.

ஆனால் இதுவரை எந்தவொரு முச்சக்கரவண்டி சாரதிகளும் பதியவில்லை இது பாரிய சட்டவிரோதமான செயற்பாடு இந்த முச்சக்கரவண்டி பற்றி ஒரு முறைப்பாடு வரும் பட்சத்தில் இந்த பதிவு எங்களுக்கு உதவி செய்யும் ஆனால் பதிவு இல்லாத காரணத்தினால் எங்களுக்கு இதனை முன்னெடுக்கமுடியவில்லை.

எனவே எமது மக்களது பாதுகாப்பிற்காக இவ்வாறான ஒழுங்கு முறைகளை கொண்டுவரவேண்டும். கடந்த வாரம் ஒரு முச்சக்கரவண்டி சாரதியினால் பெண் ஒருவர் துஷ;பிரயோகம் செய்யப்பட்டு முச்சக்கரவண்டி சாரதியின் தோலைபேசி எண் வழங்கப்பட்டும் அதற்கான எந்த முடிவும் கிடைக்கப்படவில்லை. இந்த நிலையில் மாநகரசபை ஒரு இறுக்கமான நடைமுறைக்கு வரவேண்டியது எங்களது நிர்ப்பந்தம்.

மாநகரசபையில் பதியப்பட்டு மாநகரசபையினால்; ஒதுக்கப்பட்ட தரிப்பிடங்களிலே தங்களது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால் இங்கு சில முச்சக்கரவண்டி தரிப்பிடங்கள் பதியப்படவில்லை. எனவே இவை அனைத்தும் வீதி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசகை, மாநகரசபை ஆகிய மூன்று திணைக்களமும் சேர்ந்து எவ்விடத்தில் தரிப்பிடம் அமைப்பது எவ்வளவு பேரை வைப்பது என்பதை தீர்மானிக்கும்

பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு அந்த பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி தரிப்பிடங்களை வழங்கும். எனவே அனைத்து முச்சக்கரவண்டி சாரதிகளும் மிகவிரைவில் பதிந்து தங்களது வியாபார நடவடிக்கையை மேற் கொள்ளவேண்டும். அல்லதா இடத்தில் பதிவு அற்ற முச்சக்கரவண்டிகள் செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கப்படும்.

இந்த போராட்டம் என்பது சட்டத்தை மீறும் செயலாகும் மாநகரசபை நியதிச் சட்டத்தை அமுல்படுத்தும் போது அதை அரசியல்வாதிகளும் சரி அதிகாரிகளும் சரி அதனை அனுசரித்து போகவேண்டும.; அரசியல்வாதிகள் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என செல்வதற்கு அருகதையில்லை. அந்த சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டிய இடம் பாராளுமன்றம்.

பாராளுமன்றத்தில் அந்த சட்டத்தை இரத்துச் செய்த பின் அவர்கள் அந்த கூட்டத்தில் கலந்து கருத்து தெரிவிக்கலாம். வெறுமனமே அரசியல் நடாத்துவதற்காக சட்டத்தை அமுலாக்காதே என்று சொல்வதற்கு அருகதையில்லை இது ஒரு வங்குரோத்து அரசியலை சில அரசியல் வாதிகள் செய்கின்றனர்.

மாநகரசபையுடன் கதைக்கவேண்டும் அதனோடுதான் தீர்மானிக்கவேண்டும் முச்சக்கரவண்டி சங்கம் என்பது ஒரு நலன்புரிச்சங்கம் ஒரு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடமுடியாது நலன்புரிச் சங்கம் அதன் செயற்பாட்டில் ஈடுபடவேண்டும் எந்த தரிப்பிடத்தில் யார் இருக்கவேண்டும் என்பதை மாநகரசபை தான் முடிவெடுக்கம்.

இந்த முச்சக்கரவண்டி தரிப்பிடங்களை பெரிய தொகைக்கு சங்கங்கள் மூலமாக 4 இலச்சம் தொடக்கம் 8 இலச்சம்வரை ஒவ்வொரு தரிப்பிடத்திற்கும் ஒவ்வொரு விலைக்கு விற்பதாக மக்கள் குற்றச்சாட்டு இந்த விலை கொடுத்தால்தான் சங்கத்தில் பதியலாம் என்றும் எழுதாத சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது

எனவே முச்சக்கரண்டி தரிப்பிடத்தில் வியாபாரத்தை செய்பவர்கள் மாநகரசபையில் பதியவேண்டும் . அந்த பதிவின் முன்னுரிமைப்படி அந்த இடத்திற்கு அவர்களை அனுமதிக்கும் மாநகசைபையில் பதியாமல் தரிப்பிடத்தில் தரித்திருந்து எவரும் தொழில் செய்யமுடியாது என்றார்.

முக்கிய செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்