எரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய நேற்று மறுசீரமைக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) எரிபொருள் விலைகள்
பெற்றோல் Octane 92 - ரூபா 123 இலிருந்து ரூபா 129 ஆக ரூபா 6 இனாலும
பெற்றோல் Octane 95 - ரூபா 147 இலிருந்து ரூபா 152 ஆக ரூபா 5 இனாலும
ஒட்டோ டீசல் - ரூபா 99 இலிருந்து ரூபா 103 ஆக ரூபா 4 இனாலும்
சுப்பர் டீசல் - ரூபா 118 இலிருந்து ரூபா 126 ஆக ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சந்தையில் மசகெண்ணெயின் விலையுடன் ஒப்பிடுகையில் ஒரு லீற்றர் டிசலின் விலையை 9 ரூபாவிற்குமேலான தொகையால் அதிகரிக்க வேண்டும். ஆனால், மக்களின் 
நலன் கருதி அதனை 4 ரூபாவால் மாத்திரம்உயர்த்தியதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, மாதாந்த விலை மறுசீரமைப்புக்கு அமைவாக, கடந்த ஜனவரி 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன.
பெற்றோல் ஒக்டேன் 92 95 மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகள் ரூபா 2 இனாலும் சுப்பர் டீசலின் விலை ரூபா 3 இனாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை,  ஐ.ஓ.சி பெற்றோல் டீசல் விலைகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை, 103 ரூபாவாகும்
ஒக்டேயின் 95 ரக பெற்றோலின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 155 ரூபா .
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை, 126 ரூபாவாகவுள்ளது.
ஒக்டேயின் 92 ரக பெற்றோலின் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.