காரைதீவிலிருந்து நிர்வாக சேவைக்கு தெரிவான ஆசிரியருக்கு சம்மாந்துறையில் கௌரவிப்பு

பா.மோகனதாஸ்

இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவுசெய்யப்பட்ட சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) ஆசிரியர் கெளரவிப்பு மற்றும் சர்வதேச தாய்மொழி தினம் என்பன பாடசாலையின் முதல்வர் ஏ.சீ.ஏ.மொஹமட் இஸ்மாயில் தலைமையில் நேற்று(18) இடம்பெற்றது.

காரைதீவிலிருந்து முதன் முதலாக  நிர்வாக சேவைக்கு தெரிவான இரசாயனவியல் ஆசிரியர் செல்வி பா.குணாளினி பிரதி அதிபர் திருமதி நஜீபா றஹீமீனால் பொன்னாடை போர்த்தி அதிபரினால் நினைவுச் சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தாய்மொழியே நமது பாரம்பரியம், கலாசாரம், நிலையான சமாதானம் என்பவற்றை உருவாக்குகின்றன எனும் இவ்வருட கருப்பொருளை வெளிக்கொணரும் சிறப்புரை கல்முனை வலயத்தின் முன்னாள் கல்விப் பணிப்பாளரும் எழுத்தாளருமான மணிப்புலவர் மருதூர் மஜித்தினால் ஆற்றப்பட்டதுடன் தேசிய மீலாத் விழா கலாசாரப் போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பணப்பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.