முகாமைத்துவ உதவியாளர் சேவையின் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதன் அவசியத்தை வலியுறுத்தி சுகயீனலீவுப் போராட்டம்




முகாமைத்துவ உதவியாளர் சேவையின் 13 அம்சா கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதன் அவசியத்தை வலியுறுத்தி சுகயீன் லீவுப் போராட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது

அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழில் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிசிறப்புத்தர முகாமைத்துவ உதவியாளர்களையும் ,முகாமைத்துவ உதவியாளர்களையும் ,பிரதிநிதித்துவப்படுத்தும் 10 ற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்களுடன் ஒன்றிணைந்து “ உரிமைகளை வென்றெடுக்க ஒரு நாள் “ எனும் தொனிப்பொருளில் முகாமைத்துவ உதவியாளர் சேவையின் 13 அம்சா கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதன் அவசியத்தை வலியுறுத்தி சுகயீன் லீவுப் போராட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது


அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழில் சங்கத்தின் மாவட்ட இனைப்பாளரும் ,பிரதி தலைவருமான வி .பற்குணம் ஏற்பாட்டில் அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழில் சங்கத்தின் தலைவர் எ ஜி . முபாரக் தலைமையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய முன்னாள் உள்ள சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு பேரணி மட்டக்களப்பு நகர் காந்தி வரை இடம்பெற்றது

காந்தி பூங்கா முன்றலில் ஒன்று கூடிய அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழில் சங்கத்தின் உறுப்பினர்கள் ,அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தமது கோரிக்கைகளான முகாமைத்துவ உதவியாளர்களுக்கு

எம் என்- நான்கு சம்பளத்திட்டத்தின் அடிப்படையில் சம்பளம் ,

பரீட்சை முறையிலான பதவி உயர்வுகள்

போன்ற 13 அம்சா கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதன் அவசியத்தை வலியுறுத்தி சுகயீன் லீவுப் விழிப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழில் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுகயீன் லீவுப் விழிப்புணர்வு போராட்ட இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .வியாலேந்திரன் மற்றும் ஜானாதிபதியின் இணைப்பாளர் கலாநிதி ஹோல்டன் பெர்னாண்டோ ஆகியோரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது .

இதனை தொடர்ந்து அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழில் சங்கத்தின் உறுப்பினர்கள் ,அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் பேரணியாக சென்று மாவட்ட அரசாங்க அதிபரிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது