கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கல் நிகழ்வு


கிழக்கு மாகாணத்திலிருந்து மருத்துவம் , பொறியியல் , சட்டம் ஆகிய துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கல் நிகழ்வு நேற்று கல்லடி துளசி மண்டபத்தில்  உப தலைவர் லோகராஜா தலைமையில் நடைபெற்றது .

இத திட்டமானது கடந்த 2012 ஆண்டு தொடக்கம் சங்காரவேல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைமுறைப் படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது. 

இப்புலமைப் பரிசில் திட்டத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற
துறைகளுக்குத் தெரிவு செய்யப்படும்  மாணவர்களை உள்வாங்கப் படுகின்றார்கள்.

மருத்துவத்துறைக்கு மாதாந்தம் 8000 ரூபா  பொறியியல், சட்டம் ஆகிய துறைகளுக்கு மாதாந்தம் 7000 ரூபா வழங்கப்படும். 

 இந் நிகழ்வில்  முன்னாள் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் முன்னாள் திருக்கோவில் வலய கல்வி பணிப்பாளர் எஸ்.செல்லத்துரை மற்றும் வின்சட் பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி.இராஜகுமாரி கனகசிங்கம் , கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.சிவக்கொழுந்து  மற்றும்  அதிபர் ரி.கணேசமூர்த்தி  ஆகியோர்  நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் கௌரவிக்கப்பட்டனர். 

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் , சங்காரவேல் பவுண்டேசன் ஸ்தாபகரும் லண்டன் சிவன் கோயில் அறங்காவலர் சபை பொருளாளருமான சங்காரவேல் சுகுமார் , திருமதி.சுரேகா சுகுமார் ,  திருக்கோவில் வலய கல்வி பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் ,  சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் உறுப்பினர்களான உப தலைவரும் ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளருமான லோகராஜா, செயலாளர் பிறேமானந்தன், பொருளாளர் குபேந்திரராஜா, மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஹரிகரராஜ், வெல்லாவெளி கோட்டக்கல்விப் பணிப்பாளரும் செட்டிபாளையம் சிறுமியர் இல்லத் தலைவருமான அருள்ராஜ், செட்டிபாளையம் சிறுமியர் இல்லப் பொருளாளர் யோகராஜா, சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர் கந்தசாமி , ஆலோசகர் இந்திராணி புஸ்பராஜா மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர் .

கிழக்கு மாகாணத்தில்  சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் எஸ்.சுகுமார் மற்றும்  திருமதி சுரேகா  சுகுமார் அவர்களை  மட்டக்களப்பு அரச அதிபர். மற்றும் வின்சட் பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி.இராஜகுமாரி கனகசிங்கம்   பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள் .