ஆசிரியர் ஒருவரால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி ; ஆசிரியர் கைது!



மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை அல் இக்றா வித்தியாலயத்தில் ஆசிரியர் ஒருவரினால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் (13.03.2019) புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தளர் 

மட்டக்களப்பு கல்வி வவலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பூநொச்சிமுனை அல் இக்றா வித்தியாலயத்தில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கின்ற மாணவர்கள் மீது அந்த வகுப்பாசிரியர் மிக கடுமையாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.

கையினாலும் தடியினாலும் மிகவும் கடுமையாக தம்மை தாக்கியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏன பொலிசார் தெரிவித்தனர்.

பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்களின் உதவியுடன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்த மாணவர்களை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் மாணவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் அவர்களுக்கான ஆரம்பக்கப்பட்ட சிகிச்சைகளையும் மேற் கொண்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாணவர்களை தாக்கிய குறித்த ஆசிரியரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற் கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த ஆசிரியர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பே இப்பாடசாலைக்கு கடமைக்காக வந்ததாகவும் இவர் மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர் எனவும் இவருடைய நடவடிக்கை மோசமாக காணப்பட்டதால் இவரை இடமாற்றுமாறு பல முறை அதிகாரிகளை கேட்டதாகவும் மாணவர்கள் மீது மிகவும் கடுமைக தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் இப்பாடசாலை அதிபர் ஏ.பி.அப்துர் ரசூல் தெரிவித்தார் 

இது தொடர்பாக தனக்கு கிடைத்த முறைப்பாட்டடையடுத்து மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் குறித்த ஆசிரியரை உடனடியாக இடமாற்ற நவடிக்கை எடுத்து வருவதுடன் விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.எம்.பதுர்தீன் தெரிவித்தார்.