வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 7ஆம் நாள் விவாதம்




வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 7ஆம் நாளான நேற்று இடம்பெற்ற உரைகள்

ஆரம்பக் கைத்தொழில் சமூக வலுவூட்டல் பொதுவழங்கல் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சுக்கும் விசேட பிரதேச அபிவிருத்தி தொடர்பான இராஜாங்க அமைச்சுக்குமான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நேற்று விவாதிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வளங்களை இனம் கண்டு கைத்தொழில்களை ஏற்படுத்துவது அவசியமென்று தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் அலிஷா ஹிர்மௌலானா

பொருளாதார ரீதியில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள மக்களை இலக்காக் கொண்டு அவர்களை வலுவூட்டும் வேலைத்திட்டம் அவசியமென அலிஷா ஹிர்மௌலானா தனது கருத்தை தெரிவித்தார்.

பிரதியமைச்சர் பாலித்ததெவரபெரு
விவாதத்தில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் பாலித்ததெவரபெரு 2030ஆம் ஆண்டளவில் வறுமையற்ற சமுதாயத்தை நாட்டில் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதற்கு சகல நிறுவனங்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுல் ரஹ்மான்

சர்வதேசத்தை வெற்றிகொள்ள அரசாங்கத்தால் முடிந்திருப்பதாக அவர் கூறினார். கடந்த நிர்வாக காலத்தில் நாட்டை அபகீர்த்திக்கு உள்ளாக்கி நாட்டுக்கு எதிராக சர்வதேசம் அழுத்தங்களை பிரயோகிக்கும் நிலை காணப்பட்டது. அதற்கு சிறந்த வகையில் முகம் கொடுத்து நிலையான வெளிநாட்டு உறவுகளின் ஊடாக தீர்வை பெற்றுகொள்வதற்கு தற்போதைய அரசாங்கத்தால் முடிந்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ராஜாங்க அமைச்சர் லக்கிஜயவர்த்தன
விவாதத்தில் கலந்து கொண்ட இவர் ஆறு லட்சம் வறிய மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதாக அவர் தெரிவித்தார். அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள சுவசெரிய அம்புலன்ஸ் சேவையானது தற்போது மக்களின் அத்தியாவசிய சேவையாக மாறியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர
சுவசெரிய அம்புலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் ஹர்ஷ டீசில்வாவிற்கு நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்தச் சேவையானது முக்கியமானதாக அமைந்திருப்பதாகவும் எனவும் கூறினார்.

அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன்
வறிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்

விவாதத்தில் கலந்து கொண்ட இவர் பெருந்தோட்டத்தில் வாழும் வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்து நெத்தி

விசேட தேவை உடையவர்களுக்கு காப்புறுதித் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்ற கருத்தை தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்வில

விசேட தேவையுடையவர்கள் கட்டடங்களில் உள் நுழைவதற்கு நுழைவுவாயில் ஒன்று அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்