9 வது பாடுமீன் சமரில் புனித சிசிலியா பெண்கள் பாடசாலை வெற்றி

(வரதன், அபிவரன் )

மட்டக்களப்பு பாடும் மீன்களின் சமர் என வர்ணிக்கப்படும் ஒன்பதாவது கிரிக்கட் சுற்றுப்போட்டியில் 25 ஓட்டங்களால் புனித சிசிலியா மகளிர் கல்லூரி அணி வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது..


இந்த ஒன்பதாவது கிரிக்கட் சுற்றுப்போட்டி வெபர் மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (09) திகதி காலையில் புனித சிசிலியா மகளிர் கல்லூரி அணியினரும் ,வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை அணியினருக்கும் இடையிலான 20 ஓவர் மென்பந்து சுற்றுப்போட்டி ஆரம்பித்துது இதில் நாணயச்சுழற்சில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித சிசிலியா மகளிர் அணியினர் 4 விக்கட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை பெற்றது.


இதனைத் தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 97 ஓட்டங்களை பெற்றனர்.


அதிக ஆறு ஓட்டங்களை பெற்ற வீராங்கனையாக வின்சன்ட் மகளிர் அணியின் மதுமிதாவும் .அதிக நான்கு ஓட்டங்களை பெற்ற வீராங்கனையாக புனித சிசிலியா மகளிர் அணியின் எல்சி டனிலாவும். சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக வின்சன்ட் மகளிர் அணியின் மதுமிதாவும் சிறந்த பந்து வீச்சாளராக புனித சிசிலியா மகளிர் அணியின் ஜுலியானாவும் தெரிவு செய்யப்பட்டனர்..


போட்டியின் ஆட்டநாயகியாக புனித சிசிலியா மகளிர் அணியின் எல்சி டனிலா தெரிவு செய்யப்பட்டார்.


கடந்த 8 வருடமாக இடம்பெற்றுவரும் இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 4 வருடம் வின்சன் மகளீர் உயர்தரபாடசாலை வெற்றிக்கிண்ணத்தை பெற்றது அதேபோல புனித சிசிலியா மகளிர் கல்லூரி 4 வருடங்கள் வெற்றிக்கிண்ணத்தை பெற்றதுடன் இந்த 9 வது சுற்றுப் போட்டியில் புனித சிசிலியா மகளிர் கல்லூர வெற்றிக் கிண்ணத்தை சுவீகரத்துள்ளது குறிப்பித்தக்கது
நேரடி ஒளிபரப்பு அனுசரணை :
 SUMMER CLOUDS , BATTICALOA 
அப்பிள் உணவகம் அரசடி 
SPICE HUT இந்திய உணவகம் - கல்லடி 





- >