ஆளுமையுள்ள பெண்களின் உழைப்பு, இருப்பு என்பன சமூக முன்னேற்றத்திற்கு இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது




ரவிப்ரியா

சர்வதேச மகளிர் தினத்தை தேசிய ரீ தியில், “திறமையான பெண்ணொன்று அழகான உலகத்தைப் படைக்கின்றாள்” என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் தேசிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உண்மையில் எமது செயலகப் பிரிவில் உள்ளபெண்கள் சகல விடயங்களிலும் ஆளுமை உள்ளவர்களாக அபிவிருத்தி அடைந்தவர்களாக மற்றவர்களால் அரசியல், கல்வி, கலை. விளையாட்டு, தொழில்முயற்சி என்பவற்றில் தடம் பதித்தவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

மேற்கண்டவாறு மண்முனை தென் எருவில் பிரதேச செயலகத்தால் ஒழுங்கசெய்யப்படட தேசிய மகளிர்தின நிகழ்வு திங்களன்று (11) கோட்டைக்கலாறு வாவிக்கரை பூங்காவில் நடைபெற்றபோது இதற்கு தலைமை தாங்கிப் பேசிய பிரதேசசெயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தின்ம் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்.

அதனால் எமது இவ்வருட தொனிப் பொருளுக்கமைவாக போற்றப்படக்கூடியவர்களாக, பிரதேசத்தை அழகுபடுத்துபவர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். இது எமக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விடயமாகும்.

எனவே அத்தகைய பெண் திறமைசாலிகள் ஐவரைக் கௌரவிப்பதும், மகளிர் உற்பத்திகண்காட்சியும், ஆடைத் தொழிற்சாலை திறந்து வைப்பும் மகளிருக்கு வலுச் சேர்க்கும்ஒரு பொருத்தப்பாடுடைய நிகழ்வாகவே இது ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் குறிப்பாக கோட்டைக்கல்லாறு மக்கள, மற்றும்; மகளிர் அமைப்புக்களின் பங்களிப்புடனேயே செய்யப்பட்டுள்ளது

பொதுமக்களுக்காகத்தான் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் இருக்கின்றன. எனவே பிரதேச செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற அனைத்து நிகழ்வுகளும்பொதுமக்களின் பங்களிப்புடன் நடாத்தப்படடாலே அது ஒரு முழுமையான நிகழ்வாக அமையும் என்பதை அடிப்படையாக் கொண்டே இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.

இந்த மகளிர் தினமானது பெண்கள் சமஉரிமை பெற்றவர்களாக வாழ்வதற்கும், அடங்கிக் கிடக்கின்ற தங்கள்; ஆளுமைகளை வெளிப்படுத்துவதற்கும், மூடநம்பிக்கைகளைப் புதைத்து விழிப்புணர்வுடன் புத்தெழுச்சி பெறுவதற்காகவும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடவுமே சர்வதேச ரீதியில் உருவாக்கப்படடது.

ஆளுமையுள்ள பெண்களின் உழைப்பு இருப்பு என்பன சமூக முன்னேற்றத்திற்குஇன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது. எனவே பெண் என்பவள் சமூகத்தில் தவிர்க்கமுடியாத ஒரு சொத்தாக அங்கமாகப் பேணப்படுகின்றாள்.

மட்டக்களப்பு மாவட்ட பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு குறிப்பிடும் படி இருக்கின்றது. அவர்களின் சுய உற்பத்திப் பொருட்கள் பிரதேச மாவட்டபொருளாதார வளர்ச்சிக்க உந்து சக்தியாகவம் இருக்கின்றது.

எனவே எந்தவகையில் நோக்கினாலும் எமது பெண்கள் ஒதுக்கிவிட முடியாத உயர்நிலைக்கான வளர்ச்சிப் பாதையில் இருக்கின்றார்கள். அவர்களால் எமது பிரதேசத்தை மட்டுமல்ல எமது தேசத்தையும் அழகுபடுத்த முடியும் என்ற நம்பிக்கையை அவர்களதுஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எமக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இது எமக்குமிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. என்ற குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினரும் பிரதம அதிதியுமான மட் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்; மற்றும் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் திருமதி கவிதா உதயகுமார்,மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதி தவிசாளர் திருமதி கனகராசா றஞ்சினி,கௌரவ அதிதியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்டாக்டர் கு.சுகுணன், கோட்டைக்கல்லாறு ஆலயங்களின் வண்ணக்கர் மு.தம்பிராசாமற்றும் உதவி பிரதேச செயவபளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன் ஆகியோர் உட்படமகளிர் அமைப்பக்களின் நிர்வாகிகள் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வானது முக்கிய மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தது விசேட அம்சமாகும்.முதலாவதாக மகளிர் உற்பத்திப் பொருட்களின் காட்சிக் கூடம். இரண்டாவதாக ஆடைத்தொழிற்சாலை திறப்பு விழா, மூன்றாவதாக பிரதேச சாதனைப் பெண்மணிகள் கௌரவிப்பு.

இதில் மருத்துவத் தறைக்காக திருமதி சரஸ்வதி பழனித்தம்பியும். சமூக மற்றும் கல்விக்கு திருமதி கலாநிதி சுஜா றாஜினி வரதராசனும். விளையாட்டிற்கு செல்வி சந்திரசேகரன் கிருஷாளினியும், தொழில் முயற்சிக்காக செல்வி சுந்தரமூர்த்தி சிந்துஜாவும், ஆன்மீகத்திற்காக திருமதி ரிஷபநாயகி லோகிதராஸாவும்,சாதனையாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு கொளரவம் பெற்றனர்.

இங்கீதமான இயற்கைச் சூழலில் கடலில் எழுந்து, ஓடையில் விழுந்து ஆற்றை வருடும் இளம் காற்றின் ஈர்ப்பில் வனிதையர் பட்டாளம் சிலிர்த்திருக்க, சுட்டிப் பெண்போல பிரதெசசெயலாளர் சிவப்பிரியா தனக்கே உரிய தனித்துவமான சுறுசுறுப்புடன்முப்பெரும் தேவிகள் போல பொலிவாக வருகை தந்த மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி. மாகாண கிராம அபிவிருத்திப் பணிப்பாளர் கவிதா, மற்றும் பிரதி தவிசாளர்ரஞ்சினி ஆகியோர், பூ மாலைகளுடன் ஆனந்த களிப்புடன் புன்னகை பூர்த்தவாறே மேடையை அலங்கரிக்க விழாகளை கட்டியது. கண்கவர் நடனங்கள் கலைவிருந்தளிக்க, வினைத்திறன் மிக்க விழாவாக அறுவடை கண்டது.