பாடசாலைகளுக்கு ஆட்பதிவு திணைக்களத்தினால் சுற்று நிருபம்


இந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று கோரும் விசேட சுற்றுநிரூபம் ஒன்று, பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் தொழில்நுட்ப மற்றும் இயக்க செயற்பாட்டு ஆணையாளர் அர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

இதனடிப்படையில் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் இயக்க செயற்பாட்டு ஆணையாளர் அர்ஷ இலுக்பிட்டிய மேலும் கூறினார்.