இனி ஒரு விதி செய்வோம் நாடக விழா




களுவாஞ்சிகுடி விருட்சம் அரங்க படைப்பாளிகளின் இனி ஒரு விதி செய்வோம் நாடக விழா 2019 களுவாஞ்சிகுடி சி.மூ. இராசமாணிக்கம் மண்டபத்தில் 6/03/2019, 07/03/2019 அன்று படைப்பாளிகளின் நிறுவகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான யனோபன் பண்டரிநாதன் தலைமையில் கோலகலமாக நடைபெற்றது இவ் நிகழ்வில் யனோபனின் நெறியாள்கையில் போராசிரியர் சி.மெளனகுருவின் வேடனை உச்சிய வெள்ளைப்புறாக்கள் எனும் சிறுவர் நாடகமும் முனைவர் A.K.குணசேகரனின் கனவுலக வாசி எனும் தனியாள் ஆற்றுகையும் அரங்கேறியது, தயாபரன் யசோதினியின் நெறியாள்கையில் பிரத்தியேக காட்சி எனும் ஆற்றுகையும் மேடையேறியது.

இவ் நாடக விழாவிற்கு பிரதம அதிதிகளாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்லரெட்ணம் மற்றும் மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூட நிறுவகர் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் 2017ம் வருடம் க.பொ.த சாதாரண பரிட்சையில் கிழக்கு மாகணத்தில் முதல் இடத்தினை பெற்று கொண்டமைக்காக தி/மூ/கட்டைபறிச்சான் விபுலானந்தர் வித்தியாலய முதல்வர் பு.பிரபாகரன் அவர்கள் பாராட்டி கெளாரவிக்கப்பட்டதுடன் 2017ம் வருடம் திவி நெகும கலாசார போட்டியில் குறு நாடகபிரிவில் யனோபனின் எழுத்துரு நெறியாள்கையில் மேடையேறிய கானகபாடம் எனும் நாடகம் தேசிய மட்டத்தில் முதல் இடத்தை தி/மூ/கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயம் பெற்று கொண்டதர்கான நினைவு சின்னமும் வழங்கப்பட்டமை சிறப்பானது

இவ் நாடக விழாவில் அதிதிகளாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கு.சுகுணன் மற்றும் சு.வி.அ.க.நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாஸன், ஊடகவியலாலரும் முன்னணி திரைப்பட கலை இலக்கிய கலைஞருமான எல்றோய் அமலதாஸ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், கலையார்வலர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர். களுவாஞ்சிகுடி வரலாற்றில் இவ்வாறான நாடக விழா நடைபெற்றமை இதுவே முதல் தடைவையாகும்