கல்முனையில் மகளிர் தின விழாவும் மரநடுகையும்.




-கே.கிலசன்-
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் "மாற்றத்தின் முகவரிகள் மகளிர்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர்தின விழா கல்முனை கடற்கரையில் இன்று(14.03.2019) பி. 2.30 மணியளவில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் Dர்.அனுசூயா சேனாதிராஜா அவர்களும், கௌரவ அதிதிகளாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் TJ.அதிசயராஜ்மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஆள்.இசைடீன் மற்றும்  திருகோணமலை மதியுரைஞர் இளைஞர் அபிவிருத்தி அகத்தினுடைய நிறுவுனர் திரு. பொன் சச்சிவானந்தம் அவர்களும் அம்பாறை மாவட்டத்தினுடைய அனேகமான கிராமங்களிலிருந்து அதிகளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளை உடைத்தெறியவும் மகளிர் உரிமைகளை பாதுகாக்கவும் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அதிதிகள் எடுத்துரைத்ததோடு பெண்களின் திறமைகளும் வெளிப்படக்கூடிய கவிதைகள், பாடல் என்பனவும் மன்னார் மெசிடோ அமைப்பின் நுண்கடன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகமும் சிறப்பாக இடம்பெற்றன.


நிகழ்வின் இறுதியாக இயற்கையுடன் பசுமையைப் பேணவும், சூழல் நேயமிக்க சமூதாயத்தை உருவாக்கவும் அடித்தளமாக அதிதிகளால்  கடற்கரையில் மரங்களும் நடுகை செய்யப்பட்டன.