மாமாங்க கிராம சேவையாளர் பிரிவில் அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்



போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கிராம அபிவிருத்தி தொடர்பாக கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது

ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலங்கள் ஊடாக கிராம சேவையாளர் பிரிவுகளில் தேசிய வேலைத்திட்டமாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கப்படுகின்றன

இதன் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு மாமாங்கம் கிராம சேவையாளர் பிரிவில் இயங்குகின்ற 11 கிராம அபிவிருத்தி சங்கங்கள்  ஆலய நிருவாக சபை உறுப்பினர்கள் ,,விளையாட்டு கழகங்ங்களின் உறுப்பினர்களுடன் மாமாங்கம் கிராமத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் கிராமத்தில் இடம்பெறுகின்ற போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாமாங்கம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் சிக்கன கடன் கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது

மாமாங்கம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் வி .புஸ்பநாதன் ஒருங்கிணைப்பில் சங்கத்தின் தலைவர் ,முனிசாமி உதயராஜ் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் மாமாங்கம் கிராமத்தின் 11 அபிவிருத்தி சங்கஙகளின் நிர்வாக உறுப்பினர்கள் , விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் , ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் மாமாங்கம் மகளிர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்