இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு உத்தேச விலை சூத்திரம்



இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களுக்கு விலைச்சூத்திரத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு உரிய தீர்வுகாணும் பொருட்டு நியமிக்கப்பட்ட குழுவினால் சர்வதேச சந்தையில் நிலவும் விலை மற்றும் பரிமாற்ற வீத வேறுபாடுகளை கருத்தில் கொண்டு, நுகர்வோர், அரசாங்கம் மற்றும் பால்மா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளோர் பயனடையும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு விலைச் சூத்திரமொன்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குறித்த உத்தேச விலைச் சூத்திரத்தை நுகர்வோர் அதிகார சபை மூலம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில், விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி.ஹரிசனினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.