வைத்தியர் ஸ்ரீகரநாதனின் இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்



திருமதி. நல்லம்மா பூபாலரெட்ணம் அவர்களின் 10வது ஆண்டு நிறைவினை பூர்த்தி செய்யும் முகமாக அன்னாரின் மகனான விசேட கண் சத்திரசிகிச்சை நிபுணர் Dr.பூபாலரெட்ணம் ஸ்ரீகரநாதன் அவர்களினால் ஆரையூர் வாழ் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நந்தகோபன் கலாசார மண்டபத்தில் கடந்த 02.02.2019 அன்று இலவசமாக கண் பரிசோதனை முகாமை நடாத்தி இருந்தார்.

இந் நிகழ்வின் ஆரம்ப விழாவில் மாநகர முதல்வர் திரு.தி.சரவணபவான், பிரதேச சபைத் தலைவர் திரு.S.மகேந்திரலிங்கம், சமூக சேவையாளர் திரு.பத்மநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.  இதில் 500ற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இம் முகாமிற்கு Dr. P.ஸ்ரீகரநாதனுடன், Dr. மு.ஜெயக்காந் (விசேட கண் சத்திரசிகிச்சை நிபுணர்), Dr. M.I.M றிசாத் (வைத்திய கலாநிதி) ஆகியோருடன் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை தாதியர்களும், ஊழியர்களும் மற்றும்   Dr .P. ஸ்ரீகரநாதனின் பாடசாலை நண்பர்களும் கலந்து சிறப்பாக செய்து முடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இம் முகாமில் இனம் காணப்பட்ட சுமார் 60 பயனாளிகளுக்கு 02.03.2019, 03.03.2019 ஆகிய இரு தினங்களிலும் G.V தனியார் வைத்திய சாலையில் Dr. பூ.ஸ்ரீகரநாதன் அவர்களின் முழு அனுசரணையில் சிறந்த ரக Alcon (USA) வில்லைகள் பொருத்தப்பட்டு  ஒரு பயனாளிக்கு குறிப்பிடப்பட்ட தொகைப் பணம் வீதம் செலவிடப்பட்டும் முற்றிலும் இலவசமாக கண்திரை (Cataract) அகற்றும் சத்திர சிகிச்சை நடைபெற்றது. Dr. பூ.ஸ்ரீகரநாதன் , Dr.அருள்முரளி (Consultant Anaesthetist), Dr. கமலினி (வைத்திய கலாநிதி)  மற்றும் தாதிய உத்தியோகஸ்தர்கள் T.பத்மலிங்கம், T.தனுசா சிவராஜ் இவர்களின் உதவியுடன் மிகவும் நேர்த்தியாக நடந்தேறியது.

மேலும் இச் சிகிச்சைக்காக G.V தனியார் வைத்தியசாலை தன்னலமற்ற சகல உதவிகளையும் வழங்கியிருந்தது இதற்கு உரிமையாளர்  Dr. V.விவேகானந்தராஜா மற்றும் அவரது பாரியார், ஊழியர்கள் அனைவருக்கும்  Dr. P.ஸ்ரீகரநாதன் அவர்கள் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.