மட்டக்களப்பு மாநகர சபையினால் இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு



மட்டக்களப்பு மாநகர சபையினால் இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று  மாநகர சபை வளாகத்தில் நடைபெற்றது

உள்ளக உள்நாட்டலுவல்கள் ,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மட்டக்களப்பு மாநகர சபைக்கு வழங்கப்பட்ட நீர்த்தாங்கி மற்றும் கழிவு அகற்றும் வாகனங்கள் ,மற்றும் மாநகர் சபையின் நிதியினால் கொள்வனவு செய்யப்பட மண் அகழ்வு இயந்திரமும் மாநகர சபையின் சுகாதார பிரிவுக்கும் , வேலைப்பகுதிக்கும் கையளிக்கும் நிகழ்வு நேற்று  நடைபெற்றது .

மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல் .பிரதி ஆணையாளர் .என் .தனஞ்சயன் , மாநகர பிரதி முதல்வர் கே .சத்தியசீலன் , மாநகர சபை கணக்காளர் , மாநகர சபை பொறியிலாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்