வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும்

வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தில் நேற்று இடம்பெற்ற உரைகள்

 வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் தொலைத்தொடர்புகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்தார்.

தொலைத் தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விளையாட்டு மற்றும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு, தொழில்அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

 வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் அங்குள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஆலோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், தூதரகங்களில் வாக்களிப்பதற்கு இடமளிப்பது அரசியல் மயப்படுத்தப்பட்டதாக அமைந்துவிடும். யார் அரசாங்கம் அமைத்தாலும் அவர்களால் நியமிக்கப்படும் தூதுவர்களின் செயற்பாடுகள் பாதிக்கப்படும். இருந்தபோதும் வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.


பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் : வடக்கு கிழக்கு காணி பிரச்சினைகுளுக்கு காணி அமைச்சே காரணமாகவிருக்கிறது என்று நேற்று நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் தெரிவித்தார். குறிப்பாக மகாவலி திணைக்களம் தொல்பொருள் திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களத் உள்ளிட்ட நான்கு அரசாங்க திணைக்களங்கள் பொது மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள காணிகளை தமக்கான இடங்களாக அடையாளப்படுத்தியுள்ளன என தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் மற்றும் அந்தந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி காணிகளுக்கான பரிந்துரைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் : கீரிமலை மற்றும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை அண்மித்த பகுதிகளில் சுற்றுலாத்துறைக்கான காணிகளை சுவீகரிப்பதற்கு அளவிடப்படவிருப்தாக தெரிய வருகிறது என்று நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கூறினார். இவ்வாறு இங்குள்ள மக்களின் காணிகளை சுவீகரிக்காது அவர்களுக்கு தேவையான காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி :
மட்டக்களப்பு மாவட்டத்தில் 7300 பேருக்கு உறுதிப் பத்திரங்களையும் உரிமைப் பத்திரங்களையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 23 ஆம் திகதி பிரதமர் தலைமையில் காணி உரிதிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அபிவிருத்தியினை முழு வசதிகளுடன் செய்வதற்கு இணங்கியமைக்கு அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எஸ்.எம். மரிக்கார் உரையாற்றுகையில் கிரிக்கட் விளையாட்டை பாடசாலை மட்டத்தில் இருந்து விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார். கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்காக காத்திருக்காது விளையாட்டுத் துறை அமைச்சர் பாடசாலைகளிலே கிரிக்கட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா
 நாட்டை பிரதிநிதிதுவப்படுத்தும் விளையாட்டு வீரர்களை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழு நிலை விவாதத்தில் தெரிவித்தார். இலங்கையின் விளையாட்டுத் துறை சர்வதேச ரீதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.எனவே விளையாட்டுத் துறையில் ஒரு சில திறமைகளை வெளிப்படுத்தினாலும் மேலு;ம திறமையானவர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார்.