Future Mind சமூக மேம்பாட்டு அமைப்பினால் மகளிர் தின நிகழ்வு


பெண்களும் ஆண்களுக்கு நிகராக அனைத்திலும் பங்களிப்பு செய்தல் அவசியம் எனும் கருப்பொருளில் இன்று Future Mind சமூக மேம்பாட்டு அமைப்பினால் காலை 7.30 மணியளவில்  மட் / வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் துளிர் செயற்பாட்டின் முதலாவது நிகழ்வாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள், சுற்றாடல் படையணி, பொறுப்பாசிரியர்கள்,  போக்குவரத்து பொலீஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது தவிசாளர் மற்றும் அதிபரினால் பெண்கள் சம்பந்தமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

இதன் அடுத்த நிகழ்வு காலை 8.30 மணியளவில் கிரான் மத்திய கல்லூரியில் மர நடுகை ஆரம்பமானது. இந் நிகழ்வில் கல்லூரி முதல்வர், வாழைச்சேனை கிளை HNB ASSURANCE முகாமையாளர் மற்றும் ஊழியர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் பங்கு பற்றினர்.

அதனைத் தொடர்ந்து கோறளைப்பற்று தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டினால் வாழைச்சேனை பெண் வர்த்தகர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கான குடைகளும், கூடைகளும் கொடுக்கப்பட்டது. இதன் போது சபை தவிசாளர் மற்றும் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.