Friday, March 15, 2019

முன்னாள் மட்டக்களப்பு மகாஜனா , கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் மயில்வாகனம் பிரசாத் காலமானார்

ads


மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் முகாந்திரம் மயில்வாகனம் உடையார் பொன்னம்மா தம்பதிகளுக்கு மூன்று பெண் சகோதரிகளுடன்  ஏக புத்திரராக பிரசாத் அவர்கள் பிறந்தார். இவரது குடும்பம் கல்லடிப் பகுதியில் வாழ்ந்த பெயர் சொல்லக் கூடிய உடையார் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர் ஆசிரியராக தனது முதல் நியமனத்தை தம்பிலுவில் மகா வித்தியாலயத்திலும், பின்னர் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் பணியாற்றினார். சிறிது காலம் விவசாயப் பாடத்திற்குரிய ஆசிரிய ஆலோசகராக மட்டக்களப்பு மாவட்டக் கல்விப் பணிமனையில் கடமை புரிந்தார்.


இதனைத் தொடர்ந்து அதிபர் பரீட்சையில் சித்தியடைந்து கிரான் மகா வித்தியாலயத்திலும் மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியிலும்    பணி புரிந்தார். தான் ஓய்வுபெறும் வரைக்கும் விவேகானந்தா மகளிர்     கல்லூரியில் தனது கடமையை செவ்வனே புரிந்தார். சிறிது காலம் திறந்த பல்கலைக் கழகத்திலும் விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ளார்.

இவர் பொதுப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தியது மாத்திரமல்லாது. சமயத்திலும் தனது அளப்பரிய கைங்கரியங்களைச் செய்துள்ளார். இதற்குச்சான்றாக கல்லடி உப்போடை நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபையின் தலைவராக இருந்து இறை பணியாற்றியுள்ளார் என்றால் மிகையாகாது. இவரது  சகோதரிகளான திருமதி. சாந்தஜீவசௌந்தரி மருகப்பன் மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலையின் துணை அதிபராகக் கடமையாற்றினார். இரண்டாவது சகோதரி அமரர் திருமதி சிவஞானசௌந்தரி சங்காரவேல் விஞ்ஞானப் பாட ஆசிரியையாக சிவானந்தா தேசிய பாடசாலையில் சேவையாற்றினார். மூன்றாவது சகோதரி பேராசிரியர் டாக்டர் நவஞானசௌந்தரி ஜெயதேவா அமேரிக்காவில் பேராசிரியாராகக் கடமையாற்றுகின்றார். இவரது குடும்பமே கல்விக் குடும்பம் என்றே சொல்ல வேண்டும்.
இவருடைய மைத்துனர்கள்  அமரர் முருகப்பன் (ஓய்வு நிலை கல்வி அதிகாரி - மட்டக்களப்பு மாவட்டம் ) , அமரர் சங்காரவேல் ( ஓய்வு நிலை அரச அதிபர் ) பேராசிரியர் கலாநிதி ஜெயதேவா ( அமேரிக்கா )  ஆவார்கள்  .

இவரது மனைவியான திருமதி தனலெட்சுமி பிரசாத் இவருக்கு எப்போதும் உறுதுணையாகவே செயல்படுகின்றார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஒருவர் திருமதி. நிருக்ஷh பாலமுரளி லண்டனில் வசிக்கின்றார். மற்றைய மகள் திருமதி நிரோசினி ஹரிகரராஜ் செங்கலடி மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். இவரின் மருமகன்   க. ஹரிகரராஜ் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றுகின்றார்.

இவரது ஆசிரியர் அதிபர் சேவைக்காலத்தில் மாணவர்களின் முன்னேற்றத்தில் மிகவும் அக்கறை கொண்டு செயற்பட்டவராவார். மட்டக்களப்பு விழிப்புலனற்றோர் தரிசனம் பாடசாலை ஆரம்பிப்பதற்குரிய இடத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னின்று உழைத்தவர் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாததொன்று. இவரது ஈமக்கிரியைகள் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அன்னாரின் நொச்சிமுனை இல்லத்தில் நடைபெற்ற தனக்கிரியைகள் கல்லடி உப்போடை இந்து மயானத்தில் நடைபெறும். ஜனனம் என்பது நிகழ்வு இறப்பு என்பது சரித்திரம். சரித்திரம் சொல்ல அமரர் முகாந்திரம் மயில்வாகனம் பிரசாத் தனது இறுதிப் பயணத்தை ஆரம்பித்து விட்டார்.

முன்னாள் மட்டக்களப்பு மகாஜனா , கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் மயில்வாகனம் பிரசாத் காலமானார் Rating: 4.5 Diposkan Oleh: Sayanolipavan Ramakirushnan
 

Top