Tuesday, March 19, 2019

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி போராட்டத்தால் கிழக்கு ஸ்தம்பிதம்

ads

(வரதன், வி.சுகிர்தகுமார் ,பாறுக் ஷிஹான் , மு.கோகிலன்)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி   நீதிக்கான பேரெழச்சி எனும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால் காரணமாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு , அம்பாறை , திருகோணமலை மாவட்டங்கள் இன்று (19) காலை முதல் ஸ்தம்பித்துள்ளன.இந்த மாவட்டங்களின் தமிழ்ப் பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமுகமளிக்கவில்லை என்பதுடன் அரச அலுவலகங்கள் அரச தனியார் வங்கிகளும் இயங்கவில்லை.மேலும்  வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன் பாதுகாப்புக் கடமையில் பொலிஸார் ஈடுபட்டிருப்பதையும் காண முடிகின்றது.

 வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரி கதவடைப்புப் போராட்டத்துக்கும் நீதிக்கான மாபெரும் மக்கள் பேரெழுச்சிக்கு வருமாறும் அழைப்பு விடுத்து மட்டக்களப்பு மாவட்டமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அமைப்பினhல் .மட்டக்களப்பு - கல்லடிப் பாலத்திலிருந்து  (19)  இன்று  காலை 10 மணிக்கு பேரெழுச்சி ஆரம்பமாகியது. . மேலும் 'கால அவகாசம் வேண்டாம்; சர்வதேச விசாரணை வேண்டும்' 'விடயத்தை ஐ.நா பொதுச் சபைக்குப் பாரப்படுத்த வேண்டும் 'காணாமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம்' ஆகிய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இப்போராட்டம் நடைபெற்றது.






























வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி போராட்டத்தால் கிழக்கு ஸ்தம்பிதம் Rating: 4.5 Diposkan Oleh: Team
 

Top