கிழக்கு மாகாண கஷ்ட பிரதேச மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு

கிழக்கு மாகாண கஷ்ட பிரதேச மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடாத்தப்பட்டு மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை ராணமடு இந்து மகாவித்தியாலயம் இடம்பெற்றது .

ChiDAES CANADA  அனுசரணையில் Lions Club of Colombo North District 306 B1 அமைப்பினர் இத் திட்டத்தை  ஒழுங்கு செய்திருந்தனர் .

ராணமடு இந்து மகாவித்தியாலயம்  , அகத்தியர் வித்தியாலயம்  , கண்ணகி வித்தியாலயம் , ஸ்ரீ முருகன் தமிழ் வித்தியாலயம்  பாடசாலைகளை சேர்ந்த  மாணவர்கள்  இதன்  மூலம்  பயன்பெற்றனர்  .

இந் நிகழ்வில் Lions Club of Colombo North District 306 B1  லயன்ஸ் கிளப் தலைவர் லயன் சிவா , பொருளாளர் லயன் சுந்தர் , லயன் கருணேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு மூக்கு கண்ணாடிகளை மாணவர்களுக்கு வழங்கிவைத்தனர்



















.