மட்டக்களப்பில் டென்னிஸ் விளையாட்டு பற்றிய ஒரு கண்ணோட்டம்.


ஒரு மனிதனுக்கு வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக ஏற்றுக்கொள்ள கூடிய மனப்பான்மையை உருவாக்குவது விளையாட்டு. பொதுவாக நம்முடைய சமூகத்தில் படிப்பதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் விளையாட்டிற்கு அளிக்கப்படுவதில்லை.

தன்னுடைய பிள்ளை படித்து ஒரு உத்தியோகத்திலோ அல்லது ஒரு பெரிய பதவியிலோ இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்களே தவிர தன்னுடைய பிள்ளை விளையாட்டில் ஒரு வெற்றி நிலையை அடைய வேண்டும் என்று விரும்புவதில்லை. பிள்ளைக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும் கூட விளையாட்டு வாழ்க்கைக்கு உதவாது படித்தால் மட்டுமே நல்ல எதிர்காலம் உண்டு என்று கூறி அந்த பிள்ளையின் திறமையை முளையிலேயே கிள்ளி எறியும் வேலையை தான் அநேகமான பெற்றோர்கள் செய்கிறார்கள். அதிலும் பெண் பிள்ளைகளுக்கு விளையாட்டு அவசியமற்றது என்று நினைக்கும் பெற்றோரும் இருக்கிறார்கள்.

புகழின் உச்சத்தில் இருக்கும் விளையாட்டு வீரர்களின் திறமையை பாராட்டி போற்றும் நாம் நம் வீட்டு பிள்ளையை அப்படி ஒரு நிலைக்கு கொண்டு வர முயல்வதில்லை.

அதிலும் கீழ்மட்ட மக்கள் விளையாடும் விளையாட்டு மேல்மட்ட மக்கள் விளையாடும் விளையாட்டு என்று விளையாட்டிலும் பிரிவினை பார்க்கிறோம்.


நம் மக்களிடையே பரவலாக இருக்கின்ற கருத்துகளில் ஒன்று டென்னிஸ் விளையாட்டு என்பது பணக்காரர்கள் மட்டும் விளையாடும் விளையாட்டு என்பது. அப்படி கூறுவதற்கான காரணம் என்ன? எதை வைத்து இப்படியான வரையறைகளை வகுக்கிறார்கள் என்பது சரியாக புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக தான் இருக்கிறது. இந்த விளையாட்டில் இருக்கும் கட்டணங்கள் செலவுகள் தான் காரணம் என்றால் நிச்சயமாக அதை ஏற்றுக் கொள்ள இயலாது. ஏனெனில் எல்லா விதமான விளையாட்டுக்களும் மற்றும் கல்வி சம்மந்தப்பட்ட விடயங்களும் அந்தந்த துறை சார்ந்தவர்களால் கட்டணங்கள் அறவிடப்பட்டு தான் பயிற்றுவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் டென்னிஸ் விளையாட்டு பற்றிய ஒரு கண்ணோட்டம்.

டென்னிஸ் விளையாட்டை பற்றி மட்டக்களப்பு மாவட்ட டென்னிஸ் விளையாட்டிற்கான ஒருங்கிணைப்பாளர் மற்றும் மட்டக்களப்பு டென்னிஸ் சங்கத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் தினேஷ்குமார் விஜயநாதன் அவர்கள் கூறுகையில் "டென்னிஸ் விளையாட்டில் decision making என்பது மிகவும் முக்கியமான ஒன்று. டென்னிஸ் விளையாடும் ஒருவர் தன் இலக்கு எது என்பதை வெறும் 0.4 நொடியில் தீர்மானிக்க வேண்டும். இது வேறு எந்த விளையாட்டிலும் இல்லாத ஒன்றாகும். முழுமையான கவனமும் எதிரில் வரும் பந்தை நோக்கியதாகவே இருக்க வேண்டும். நொடியில் முடிவு எடுத்து வேகமாக செயற்பட வேண்டும். டென்னிஸ் விளையாட்டை Mental game என்று கூறுவார்கள்" என தெரிவித்தார்.

மேலும் ,
மட்டக்களப்பு Tennis academy ல் இருக்கும் பயிற்றுவிப்பாளர்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதார ரீதியில் பெரிய குடும்ப பின்னணியை சேர்ந்தவர்கள் அல்ல அத்துடன் டென்னிஸ் வகுப்பில் பயிற்ச்சி பெறும் மாணவர்களிலும் கூட எல்லோரும் வசதியான குடும்ப பிண்ணனியை சேர்ந்தவர்கள் என்று கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் கடந்த ஒரு வருட காலமாக டென்னிஸ் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. இது 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதி மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டது.

"இந்த டென்னிஸ் வகுப்பில் பயிற்ச்சி பெறும் மாணவர்களில் கடின முயற்ச்சியுடனும் விருப்பத்துடனும் விளையாடும் திறமை மிக்க மாணவர்களை இனங்காணும் பட்சத்தில் அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக வேண்டும் என்று நாங்கள் முழுமையான முயற்ச்சியை மேற்கொள்கிறோம். அதற்கான பயிற்ச்சிகளையும் வழங்குகின்றோம், அப்படியான மாணவர்களில் சிலர் கட்டணங்களை செலுத்த முடியாமல் போகும் சமயத்தில் நாங்கள் கட்டணமின்றி அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறோம். மற்றும் அவர்களுக்குரிய விளையாட்டு உபகரணங்களையும் நாம் வழங்குகின்றோம்" என தினேஷ்குமார் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் பாடசாலை மட்டத்திலும் மாணவர்களை தெரிவு செய்து பாடசாலை மூலமாக டென்னிஸ் பயிற்ச்சிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு Tennis academy மாணவர்களின் சாதனைகள் என அவர் குறிப்பிட்டவை,


கடந்த வருடம் August நடைபெற்ற tournament ல்

Red ball doubles boys- champion

Red ball singles girls - runners up

Orang ball singles boys- runners up

Green ball singles boys - runners up

5 பேர் அரையிறுதிக்கு சென்றனர்.

6 பேர் காலிறுதிக்கு சென்றனர்.


All island inter school cool tennis tournament 'A' division ல்,

4 நான்காம் இடத்தை மட்டக்களப்பு Tennis academy மாணவர்கள் வென்றார்கள்.


2018 December fast track cool tennis tournament ல்,

Red ball boys singles level 1- Champion மற்றும் runners up ( 2 quarterfinals)

Red ball boys doubles- champion மற்றும் runners up

Green ball singles boys- champion

Green ball boys doubles- champion.


2019 march RF challenge cool tennis tournament ல்,

Red ball boys singles level 1 - runners up

Orange ball doubles boys- runners up


மேலும் மட்டக்களப்பு tennis academyல் இருந்து 2 மாணவர்கள் 12 மற்றும் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் SLTA outstation development pool ற்கு தெரிவாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

நமது மட்டக்களப்பு மாவட்டத்தில் திறமை மிக்க விளையாட்டில் ஆர்வமுள்ள நிறைய பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை ஊக்குவித்து இது போன்ற சாதனைகளை அவர்கள் செய்வதற்கு வழிவகுத்து கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு.

நம் மண்ணிலிருந்து உலகம் போற்றும் ஒரு Tennis player உருவாகினால் அது நம் அனைவருக்கும் பெருமை தானே.

-சகி-