100 மெகாவாட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி


தடையற்ற மின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் 100 மெகாவாட் மேலதிக மின்சாரத்தை 6 மாதங்களுக்கு கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளைத் தளமாகக் கொண்ட 3 நிறுவனங்களிடமிருந்து மன்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நிலையான கொள்முதல் குழுவினை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஒவ்வொரு அலகும் 28 ரூபாவிலிருந்து 31 ரூபாவிற்குள் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, மின்சார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடியதான குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை முன்மொழிவதற்காக பிரதமர் தலைமையிலான குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் அமைச்சர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, கபீர் ஹாஷிம் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

இதேவேளை, முதலீட்டாளர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்கு தடையாக காணப்படுவதால் 2011 ஆம் ஆண்டு 43 ஆம் இலக்க சட்டத்தை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முதலீட்டாளர்களின் எண்ணக்கருவில் தோன்றும் நிச்சயமற்ற தன்மை மற்றும் வணிகச்சூழலை பாதிக்கும் காரணிகளை கருத்தில் கொண்டு இந்த சட்டம் இரத்து செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த முன்மொழிவு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.