வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு- செலவுத்திட்டம் (பாதீடு) 45 மேலதிக வாக்குகளின் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்தது.

ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து, ஜே.வி.பி., தேசிய சுதந்திர முன்னணி எதிர்த்து வாக்களித்தது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

அதனடிப்படையில், வரவு- செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக, 119 வாக்குகளும் எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இந்த வரவு- செலவுத்திட்டம், 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.